Yarl Forum
பூவரசு 15வது ஆண்டுமலர் வெளியீடு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: பூவரசு 15வது ஆண்டுமலர் வெளியீடு (/showthread.php?tid=5374)



பூவரசு 15வது ஆண்டுமலர் வெளியீடு - sOliyAn - 02-07-2005

<img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/bild1a.jpg' border='0' alt='user posted image'><img src='http://tamilamutham.net/images/stories/kalaignar/bild1.jpg' border='0' alt='user posted image'>
6ம் திகதி மாசி மாதம் 2005 அன்று பிறேமன்-குக்ரிங் நகரில் மாலை 5 மணியளவில், பூவரசு கலை இலக்கியப் பேரவையின் 'பூவரசு 15வது ஆண்டு மலர்' வெளியீடு சிறப்புற நிகழ்ந்தது.

பேரவை அங்கத்தவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் எனப் பலதரப்பட்ட பிறேமன் வாழ் மக்கள் குழுமியிருக்க, திருமதி உதயகுமார், திருமதி சிறீஸ்கந்தராஜா ஆகியோர் மங்கள விளக்கேற்ற, பூவரசு இனிய தமிழேட்டின் ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களின் வரவேற்புரையுடன் வெளியீட்டு வைபவம் ஆரம்பமாகியது. இந்துமகேஷ் அவர்கள் பூவரசின் ஆரம்ப நிகழ்வுகளை, அப்போது உடனிருந்து தொடர்ந்து உதவுபவர்களை, இடையில் மறைந்தவர்களை எல்லாம் நினைவுகூர்ந்தது மட்டுமன்றி, தொடர்ந்து பூவரசு பரவலாக வந்திருந்தவர்களின் அபிப்பிராயங்களையும் ஒத்துழைப்பையும் கோரினார்.

பூவரசு கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் திரு பாலசுப்ரமணியம் அவர்கள் பக்திப் பாடலுடன் ஆரம்பித்து பூவரசின் பணிகளையும் வளர்ச்சியையும் தொட்டுக்காட்ட, பூவரசு 15வது ஆண்டுமலரின் முதற்பிரதியை பிறேமன் தமிழாலய நிர்வாகி திருமதி கன்னிகா சந்திரபாலன் அவர்கள் வெளியிட, திரு தனபாலசிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் சின்னஞ்சிறு மழலை செல்வி தாரிணி உதயகுமாரின் பாடல் சபையோரைக் கவர, செல்வன் ரமணராஜா செல்வரட்ணம், தனது பெற்றோர் ஊட்டிய தமிழை கடந்த 14 ஆண்டுகளாக செழுமையாக்கியது பூவரசே எனக் குறிப்பிட்டு, பூவரசின் ஆக்கங்களும் அதில் வரும் படைப்புகளும் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து இந்துமகேஷ் அவர்கள் எழுதிய பிரபலமான கிறீஸ்துவ பாடலொன்றை செல்வி பென்சியா ஞானசெல்வம் தன்னினிய குரலில் தர, திரு இராஜன் முருகவேல், திருமதி கன்னிகா சந்திரபாலன், திருமதி பெனடிக்ரா ஞானசெல்வம், திரு மகேந்திரமூர்த்தி, திரு உதயகுமார், திரு ரமேஷ் பத்மகரன், திரு தனபாலசிங்கம், திரு ஆனந்தராஜா, திருமதி சித்ரா தங்கராஜா, திரு ஞானசெல்வம் ஆகியோர் பூவரசு இனிய இதழின் சேவைகளையும் சாதனைகளையும் அது வருங்காலத்தில் ஆற்றவேண்டியன பற்றிய ஆலோசனைகளையும் தமது வாழ்த்துக்களையும் கூற, பூவரசு 15வது ஆண்டு மலரின் வெளியீடு ஒரு தரமான இலக்கிய நிகழ்வாக நிறைவெய்தியது.

பூவரசு இனிய இதழின் 15வது ஆண்டு விழா எதிர்வரும் சித்திரை மாதம் நிகழும் என அங்கே உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
Poovarasu, Postfach 103401, 28034 Bremen, Germany.


- shanmuhi - 02-08-2005

âÅÃÍ ¬ñÎ ÁÄâý þ¾¨Æ þ¨½Âò¾¢ø À¡÷¨Å¢¼ ÓÊÔÁ¡..? ? ?


- Mathan - 02-08-2005

சோழியன் அண்ணா அதனை தனது தளத்தில் ஏற்றுவார் என்று நினைக்கின்றேன், பூவரசு இதழுக்கு வாழ்த்துக்கள்


- sOliyAn - 02-08-2005

பூவரசு இதழை இணையத்தில் ஏற்றுவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே, ஆண்டு மலர் இணையத்தில் வர வாய்ப்பில்லை. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- shiyam - 02-08-2005

இந்த இதழை ஒரு 12 ஆண்டுகளிற்கு முன்பு யெர்மனியில் பார்க்க கிடைத்தது அப்போது படித்து வியந்தேன்மிகவும் நன்றாகவெளியிட்டிருந்தார்கள் பின்னர் படிக்க கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ஆனால் இப்போது சோழியன் அண்ணாவின் செய்தியை பார்த்ததும் மகிழ்ச்சி இன்னமும் அது வெளிவந்து கெண்டிருக்கின்றதென்பதால்.புலத்தில் ஆயிரம் பத்திரிகைகள் புத்தகங்கள் தோன்றி மறைந்து விட்டன ஆனாலும் 15 ஆண்டுகள் ஒரு புத்தகத்தை தொடர்ந்து வெளியிடுவதென்பது சாதாரண விடயமல்ல எனவே அதை வெளியிடுபாவர்கள் பாராட்டபட வேண்டியவர்களே


- Mathan - 02-08-2005

sOliyAn Wrote:பூவரசு இதழை இணையத்தில் ஏற்றுவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே, ஆண்டு மலர் இணையத்தில் வர வாய்ப்பில்லை. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

முழுமையாக போட முடியாவிடினும் உங்களுடைய படைப்பையாவாது தாருங்களேன்.


- sOliyAn - 02-08-2005

<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->இந்த இதழை ஒரு 12 ஆண்டுகளிற்கு முன்பு  யெர்மனியில் பார்க்க கிடைத்தது அப்போது படித்து வியந்தேன்மிகவும் நன்றாகவெளியிட்டிருந்தார்கள் பின்னர் படிக்க கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ஆனால்  இப்போது சோழியன் அண்ணாவின் செய்தியை பார்த்ததும்  மகிழ்ச்சி இன்னமும் அது வெளிவந்து கெண்டிருக்கின்றதென்பதால்.புலத்தில் ஆயிரம்  பத்திரிகைகள் புத்தகங்கள் தோன்றி மறைந்து விட்டன ஆனாலும் 15 ஆண்டுகள்  ஒரு புத்தகத்தை தொடர்ந்து வெளியிடுவதென்பது சாதாரண விடயமல்ல எனவே அதை வெளியிடுபாவர்கள்  பாராட்டபட வேண்டியவர்களே<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆமாம்.. அதனால்தான் இணையத்தில் ஏற்ற விரும்பவில்லை. ஆனால்.. சிறிது காலம் தாமதித்து பலதை ஆசிரியரின் அனுமதியுடன் தரலாம் என நினைக்கிறேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->