Yarl Forum
நீ????? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நீ????? (/showthread.php?tid=5372)



நீ????? - shiyam - 02-07-2005

அன்றொரு நாள்
ஆகாயத்திலிருந்து
அரிசியும் மண்ணெண்ணெயும்
ஆகா வந்துவிட்டார்கள்
கொண்டாடினோம்
குதூகலித்தோம்
குட்டி கரணமடித்தோம்
வந்து லீழ்ந்தது எமது
வாய்க்கரிசியென்றும்
மண்ணெண்ணெய் எம்
மண்ணை கொழுத்த
என்று தெரியாமல்
வந்தோரை வரவேற்று
மாலைகள் மரியாதைகள்
ஒருவன் ஏதோ சென்னான்
ஓன்றும்புரியவில்லை
ஒருவர் மெழி யெர்த்தார்
கவலை வேண்டாம்
காப்பாற்றவந்துள்ளோம்
நன்றாய் உங்களை
பார்த்து கொள்வோம்
கைதட்டினோம்
பின்னர் தெரிந்தது
பார்த்து பார்த்து
கொன்றபோது
மொழிபெயர்ப்பு
பிழையென்று
தட்டிய கைகள்
கட்டிவீதியெங்கும்
விலங்குகள்போல்
கட்டிதூக்கியே
கோழிபோல்
உயிருடன் உரிக்கப்பட்டவர்
எத்தனை
அவர்களின்
காமக்கழிவுகழை
வெளியேற்ற
கழிவறைகளாய் போன
எம்மவர் எத்தனை
காணாமல் போனவர்
எத்தனை.
என்ன பார்க்கிறீர்கள்
உங்கள் கேள்வி
சிங்களவன் இத்தனையும்
செய்யவில்லையா??
செய்தான்
அவன் எம்எதிரி
அப்படித்தான்
செய்வான்
ஆனால்
நீ????????????????????????????????????


- வியாசன் - 02-07-2005

தம்பி சியாம் கவிதை நன்றாக உள்ளது.
இந்தியா போட்டது வயிற்றுக்கல்ல வாய்க்கரிசி என்ற கருத்து நன்றாக இருக்கின்றது


- shanmuhi - 02-07-2005

Quote:மொழிபெயர்ப்பு
பிழையென்று
தட்டிய கைகள்
கட்டிவீதியெங்கும்
விலங்குகள்போல்
கட்டிதூக்கியே
கோழிபோல்
உயிருடன் உரிக்கப்பட்டவர்
¸Å¢¨¾ «Õ¨Á.
Å¡úòÐì¸û...
§ÁÖõ ¦¾¡¼Õí¸û....


- Niththila - 02-07-2005

கவிதை நன்றாகவுள்ளது ஷியாம் அண்ணா


- kavithan - 02-08-2005

Quote:அன்றொரு நாள்
ஆகாயத்திலிருந்து
அரிசியும் மண்ணெண்ணெயும்
ஆகா வந்துவிட்டார்கள்
கொண்டாடினோம்
குதூகலித்தோம்
குட்டி கரணமடித்தோம்
வந்து லீழ்ந்தது எமது
வாய்க்கரிசியென்றும்
மண்ணெண்ணெய் எம்
மண்ணை கொழுத்த
என்று தெரியாமல்
வந்தோரை வரவேற்று
மாலைகள் மரியாதைகள்
அரிசியும் மண்னெண்னையும்
மட்டுமில்லை
பருப்போடும் வந்தார்கள்
விருப்போடு வரவேற்றோம்



கவிதை அருமை ஷியாம் அண்ணா... தொடருங்கள்


- hari - 02-08-2005

கவிதை அருமை ஷியாம் தொடருங்கள்!


- kuruvikal - 02-08-2005

மனதோடு பதிவுகளாகிவிட்ட சோகங்களை மீட்டியதற்கு... நன்றிகள்..!