Yarl Forum
பொங்கியெரியும் விடுதலைத் தீ- - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பொங்கியெரியும் விடுதலைத் தீ- (/showthread.php?tid=5368)



பொங்கியெரியும் விடுதலைத் தீ- - Thaya Jibbrahn - 02-08-2005

பார்க்குமிடமெங்கும்
நீக்கமற
நயவஞ்சகர் வாழும்
பூமியிது.

குள்ளநரிகளெல்லாம்
கூடியிங்கே
கூத்தடிக்கின்றதே.

யாரொடு நோவோம்?

சத்தியப்பிரமாணம்
செய்யும் போதே
தேசத்திற்காய்
செத்துவிடவும்
உறுதிபூண்டவர்கள் தான்.

என்றாலும் என்றாலும்
ஏதிலிகள் போல
தெருவினிலே சாய
பார்த்திருக்க மாட்டோம்.

கௌசல்யன்.

தேசவிடுதலைக் குரலை
தேசமெங்கும் முழங்கிய
விடுதலைப் பறவை.

துரோக வேர்களின்
ஆழம் கண்டறிந்து
தேசம் காத்த தனயன்.

வீதியிலே வீழ்ந்தானோ?
விதிமுடிந்து போனானோ??

நம்ப முடியவில்லை.

இயற்கையும் விதியும்
எதிரிகளுடன் சேர்ந்து
ஒப்பந்தம் போட்டனவோ??

தமிழ்த் தேசம்
அழிப்பதுவாய்
சாபங்கள் இட்டனவோ?
வெல்லும் வரைதான்
உலகம்
விரட்டும்.
வென்ற பின்னர்
வாழ்த்தும்.

இனியோர் புலி விழுவதெனில்
நூறுபகை
அழிந்த பின் என்பதாய்
சபதமொன்று செய்திடுவோம்.

கொக்கரிக்கும் பகைவருக்கும்
புல்லுருவிகளுக்கும்
ஓர் செய்தி...
எரிமலையில் நெருப்பெடுத்து
அடுப்பெரிக்க நினையாதீர்;
இது
பொங்கியெரியும் விடுதலைத் தீ-


Re: பொங்கியெரியும் விடுதலைத் தீ- - shiyam - 02-08-2005

Quote:கொக்கரிக்கும் பகைவருக்கும்
புல்லுருவிகளுக்கும்
ஓர் செய்தி...
எரிமலையில் நெருப்பெடுத்து
அடுப்பெரிக்க நினையாதீர்;
இது
பொங்கியெரியும் விடுதலைத் தீ
-
_________________
வார்த்தைகள் சுடுகின்றன வாழ்த்துக்கள்


- kavithan - 02-08-2005

தொடருங்கள் தயா...


Re: பொங்கியெரியும் விடுதலைத் தீ- - Mathuran - 02-08-2005

<!--QuoteBegin-Thaya Jibbrahn+-->QUOTE(Thaya Jibbrahn)<!--QuoteEBegin-->பார்க்குமிடமெங்கும்  
நீக்கமற
நயவஞ்சகர் வாழும்
பூமியிது.  

குள்ளநரிகளெல்லாம்
கூடியிங்கே
கூத்தடிக்கின்றதே.

யாரொடு நோவோம்?

சத்தியப்பிரமாணம்  
செய்யும் போதே
தேசத்திற்காய்
செத்துவிடவும்
உறுதிபூண்டவர்கள் தான்.

என்றாலும் என்றாலும்
ஏதிலிகள் போல
தெருவினிலே சாய
பார்த்திருக்க மாட்டோம்.

கௌசல்யன்.

தேசவிடுதலைக் குரலை
தேசமெங்கும் முழங்கிய
விடுதலைப் பறவை.

துரோக வேர்களின்
ஆழம் கண்டறிந்து
தேசம் காத்த தனயன்.  

வீதியிலே வீழ்ந்தானோ?
விதிமுடிந்து போனானோ??

நம்ப முடியவில்லை.

இயற்கையும் விதியும்
எதிரிகளுடன் சேர்ந்து
ஒப்பந்தம் போட்டனவோ??

தமிழ்த் தேசம்
அழிப்பதுவாய்  
சாபங்கள் இட்டனவோ?
வெல்லும் வரைதான்
உலகம்
விரட்டும்.  
வென்ற பின்னர்
வாழ்த்தும்.

இனியோர் புலி விழுவதெனில்
நூறுபகை  
அழிந்த பின் என்பதாய்
சபதமொன்று செய்திடுவோம்.  

கொக்கரிக்கும் பகைவருக்கும்
புல்லுருவிகளுக்கும்
ஓர் செய்தி...
எரிமலையில் நெருப்பெடுத்து
அடுப்பெரிக்க நினையாதீர்;
இது  
பொங்கியெரியும் விடுதலைத் தீ-<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Cry Cry Cry Cry Cry


- வியாசன் - 02-08-2005

இனியோர் புலி விழுவதெனில்
நூறுபகை
அழிந்த பின் என்பதாய்
சபதமொன்று செய்திடுவோம்.

கொக்கரிக்கும் பகைவருக்கும்
புல்லுருவிகளுக்கும்
ஓர் செய்தி...
எரிமலையில் நெருப்பெடுத்து
அடுப்பெரிக்க நினையாதீர்;
இது
பொங்கியெரியும் விடுதலைத் தீ-

வார்த்தைகள் சரளமாக வருகிறது. தொடருங்கள் தயா