Yarl Forum
மாலுப் பாண் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: மாலுப் பாண் (/showthread.php?tid=5365)



மாலுப் பாண் - Mathan - 02-08-2005

மாலுப் பாண்

சுலபமான சாப்பாடாக அதே நேரத்தில் வயிற்றுக்கு வஞ்சகமில்லாமல் போட வேண்டுமென்றால் கடையில் நான் வாங்கி சாப்பிடும் உணவு மாலுப் பாண்.
சிங்களத்தில் மாலு என்றால் மீன். ஆக மீன்கறியை உள்ளடக்கிய பாண் மாலுப்பாணாயிற்று. மீன் மட்டுமல்லாமல் உருளைக் கிழங்கு, சீனிச் சம்பல் என்று உங்களுக்குத் தேவையானவற்றை உள்ளிட்டு இந்த பாணைச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்
1. மூன்று பேணி மா
2. மூன்று தேக்கரண்டி ஈஸ்ற் (Yeast)
3. ஒரு தேக்கரண்டி சீனி
4. அரை மேசைக்கரண்டி பட்டர் அல்லது மாஜரீன் அல்லது எண்ணை
5. ஒரு தேக்கரண்டி உப்பு
6. உங்களுக்கு விரும்பிய கறி
7. ஒரு முட்டை மஞ்சற் கரு

செய்முறை
ஈஸ்ற், சீனி இரண்டினையும் ஒரு கண்ணாடிக் குவளையில் இட்டு மூன்று தேக்கரண்டி இளம் சூடான தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு நிமிடங்களுக்குள் இக் கலவை பொங்கி வரும். இதனை மா, உப்பு, பட்டர் ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். இதனை சிறிது நேரம் தகுந்த மூடியினால் மூடி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். உருண்டைகள் சம அளவாக வருவதற்கு ஒரு வழியை சொல்லுகிறேன். மா கலவையை முதலில் இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இரண்டை நாலாக்கி நாலை எட்டாக்கி எட்டை பதினாறாக்குங்கள். இப்படிச் செய்யும் போது நாங்கள் எடுத்துக் கொண்ட இந்த அளவுக்கு எல்லாமாக 32 சம அளவிலான உருண்டைகளைச் செய்து கொள்ளலாம்.

இதே நேரத்தில் உங்களுக்கு விருப்பமான கறியினைச் செய்து கொள்ளுங்கள். மீனோ, இறைச்சியோ, மரக்கறி உணவோ என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்று செய்யப் படும் உணவானது கெட்டியாக இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு உருண்டையினுள்ளும் மோதகத்தில் உள்ளிடுவது போல் கறியினை இட்டு மூடி வட்டமாக உருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் எண்ணை தடவிய தட்டில் அழகாக எல்லா உருண்டைகளையும் அடுக்கிக் கொள்ளுங்கள். வேகும் போது இதன் மேற்பக்கம் பொன்னிறமாக வருவதற்கு நன்றாக அடித்த முட்டையின் மஞ்சற் கருவை ஒரு தூரிகையினால் தொட்டு தடவிவிடுங்கள். முட்டையை விரும்பாதவர்கள் பால் பட்டர் கலந்த கலவையை பூசிக் கொள்ளலாம் அல்லது தேனும் சிறிது தண்ணீரும் கலந்த கலவையைப் பூசிக் கொள்ளலாம்.

இப்பொழுது 150Cயில் 30 நிமிடங்கள் அவனில் சூடாக்கிக் கொள்ளுங்கள்

என்ன கருகாமல் எடுத்துவிட்டீர்களா? பலே. என்ன 32 மாலுப் பாணையும் நீங்களே சாப்பிடப் போகிறீர்களா? என்னங்க நீங்க..

நன்றி - Indrany


- Mathan - 02-08-2005

வட்டிலப்பம்

எதனால் இதற்கு வட்டிலப்பம் என்று பெயர் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லோருமே வட்டிலப்பம் என்றுதான் சொல்கிறார்கள். ஆகவே அதன் பெயரைப் பற்றி நாங்கள் ஆராய்ந்து நேரத்தைப் போக்காமல் வட்டிலப்பத்தை செய்து பார்த்து அதன் சுவையைப் பார்ப்போமே.

தேவையான பொருட்கள்:
1. எட்டு முட்டைகள்
2. 500 மி.லீற்றர் தேங்காய்ப் பால் (கெட்டியானது)
3. 500 கிராம் சர்க்கரை அல்லது கித்துள் அல்லது பனங்கட்டி
4. ஒன்றரை மேசைக்கரண்டி (Brown) சீனி
5. ஒரு தேசிக்காய்
6. 4-5ஏலக்காய்
7. வனிலா
8. 10-15கஜு

செய்முறை
முட்டை, தேங்காய்ப் பால், சர்க்கரை, சீனி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு தேசிக்காயினை நன்றாக சுத்தம் செய்து அதன் தோலை தூளாகத் துருவி கலவையுடன் கலந்து கொள்ளுங்கள்.
வாசனைக்காக ஏலத்தினை சூடாக்கி தோல் நீக்கி அரைத்து அதனையும் கலவையில் போட்டு வனிலா, கஜு ஆகியவற்றை சேர்த்து கலந்துவிட்டால் வட்டிலப்பத்திற்கான 90 வீதமான வேலைகள் முடிந்துவிட்டன.

உங்கள் விருப்ப்பத்திற்கேற்ப சிறு சிறு பாத்திரங்களில் கலவையை விட்டு, நீர் விட்ட பேக்கிங் தட்டில் வைத்து 150Cயில் 45 நிமிடங்கள் சூடாக்கினால் வட்டிலப்பம் தயார்.

நீங்கள் விரும்பினால் நீராவியிலும் இதனைச் செய்து கொள்ளலாம்.
இப்பொழுது நூறு வீதமான வேலைகள் முடிந்துவிட்டன சுவை பார்க்கத்தான் நீங்கள் வேண்டும்.

நன்றி - Indrany


- Mathan - 02-08-2005

பருத்தித்துறை வடை

இதற்கு அடிப்படையான பெயர் தட்டை வடை. ஆனால் பருத்தித்துறை என்ற நகரம் இந்த வடையைச் செய்வதில் பிரபல்யம் என்பதால் இதற்கு பருத்தித்துறை வடை என்று ஒரு காரணப் பெயரும் உண்டு.

பல தடவைகள் நான் இந்த வடையைச் செய்து பார்த்திருக்கிறேன். பருத்தித்துறை நகரத்தில் நான் வாங்கி சாப்பிட்ட முழு நிலவு போன்ற வட்ட வடிவமான அமைப்பையோ, அற்புதமான சுவையையோ என்னால் எட்ட முடியாமல் இருந்தது. இறுதியாக ஒரு பருத்தித்துறை அம்மா ஒருவரின் தொடர்பு கிடைத்ததால் அவரிடம் இருந்து தகவலைப் பெற்று வடையைச் செய்தால் முழு நிலவு போன்ற வட்ட வடிவமான அமைப்பை என்னால் பெற முடிந்தது. ஆனால் சுவை...? அதை சாப்பிட்டுவிட்டு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

தேவையான பொருட்கள்:
1. 250 கிராம் உழுத்தம்பருப்பு
2. 250 கிராம் கோதுமை மா
3. 250 கிராம் வெள்ளை அரிசி மா
4. மிளகாய்த்தூள் ( உறைப்புக்கு அளவாக)
5. இரண்டு மேசைக்கரண்டி பெரும்சீரகம்
6. கறிவேப்பிலை
7. வெண்காயம் ஒன்று

உழுத்தம்பருப்பை நன்கு தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தண்ணீரை வடித்தெடுத்து, உழுந்துடன் கோதுமைமா, அரிசிமா, பெரும்சீரகம், மிளகாய்த்தூள், சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வெண்காயம், கறிவேப்பிலை, அளவான உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போ கலவையில் இருந்து பாக்கு அளவிலான சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். பால் பேணியின் பின்புறத்தில் எண்ணை தடவிய ஒயில் பேப்பரில் உருண்டைகளை பால் பேணியின் வட்டத்தின் அளவுக்கு தட்டியெடுத்து கொதிக்கும் எண்ணையில் போட்டு எடுத்தால் தட்டைவடை தயார். பால்பேணியில் வைத்து தட்டிப் போடுவதால் வடைகள் ஒரேயளவாக வரும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். சுவை.............? சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்களேன்

நன்றி - ndrany


- tharma - 02-08-2005

<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- thamizh.nila - 02-08-2005

மதன் அண்ணா, அருமையான குறிப்புகள். நன்றி. பருத்துறை வடை செய்து பார்க்க போறேன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnappu - 02-09-2005

Quote:thamizh.nila



இணைந்தது: 27 மார்கழி 2004
கருத்துக்கள்: 362

எழுதப்பட்டது: செவ்வாய் மாசி 08, 2005 1:32 pm Post subject:



மதன் அண்ணா, அருமையான குறிப்புகள். நன்றி. பருத்துறை வடை செய்து பார்க்க போறேன்...
_________________
தமிழ்.நிலா

±ÉìÌõ 2 ¾¡õÁ¡ ¸û§Ç¡¨¼ º¡ôÀ¢¼ ¿øÄ¡ þÕìÌõ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 02-09-2005

Quote:±ÉìÌõ 2 ¾¡õÁ¡ ¸û§Ç¡¨¼ º¡ôÀ¢¼ ¿øÄ¡ þÕìÌõ
ஊறுகாய் தானே நல்லது நீங்கள் என்ன வடைக்கு நிக்கிறியள்.. எல்லாம ; தலை கீழ்???????????????? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 02-09-2005

ஊறுகாய் இந்தியாவில தான்


- thamizh.nila - 02-10-2005

மதன் அண்ணா இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்??

அப்பு - டமில் அக்கா சொன்ன அச்சாறு செய்ய போறேன்..அது வேணுமா?


- Mathan - 02-11-2005

எல்லாம் படம் பார்த்து அறிந்துகொண்டது தான். படத்தில் ஊறுகாயை தான் உபயோகிப்பார்கள் சைட் டிஷ்சாக


- Malalai - 02-11-2005

Quote:ஊறுகாய் தானே நல்லது நீங்கள் என்ன வடைக்கு நிக்கிறியள்.. எல்லாம ; தலை கீழ்????????????????
தமிழினி அக்கா இது எப்படி உங்களுக்கு தெரியும் :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 02-11-2005

Malalai Wrote:
Quote:ஊறுகாய் தானே நல்லது நீங்கள் என்ன வடைக்கு நிக்கிறியள்.. எல்லாம ; தலை கீழ்????????????????
தமிழினி அக்கா இது எப்படி உங்களுக்கு தெரியும் :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்பிடி இங்கிதமில்லாம கேள்வி கேக்கிறதே.............. :?: Idea


- tamilini - 02-11-2005

எத்தனை படத்தில பாத்திருக்கம்.. பாவிச்சால் தான் தெரியுமா என்ன..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :x