![]() |
|
கௌசல்யனின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த .... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கௌசல்யனின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த .... (/showthread.php?tid=5350) |
கௌசல்யனின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த .... - Vaanampaadi - 02-08-2005 கௌசல்யனின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த அரச இராணுவ புலனாய்வுத்துறையினரே தாக்குதல் மேற்கொண்டனர். செவ்வாய்கிழமை 8 பெப்ரவரி 2005 நெருடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன் பயனம் செய்த வாகனத்தைப் பின்தொடர்ந்து பல மணிநேரம் பயணம் செய்த இலங்கை இராணுவ அதிரடிப்படையினரும் ää அரச புலனாய்வுத்துறையினரும் இணைந்தே தாக்குதலை மேற்கொண்டதாக இச்சம்பவத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பியவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ää கௌசல்யன் பயணம் செய்த வாகனத்தை இராணுத்தினரின் வாகனமொன்று பின்தொடர்ந்து வந்தது ää இவர்கள் நாமல்கம என்ற சிங்களக் கிராமத்தடியில் கௌசல்யனின் வாகனத்தை முந்திக்கொண்டு முன்பக்கமாகச் சென்று வாகனத்தை வீதியின் குறுக்கே நிறுத்தியதுடன் கௌசல்யன் குழுவினரை வாகனத்தை விட்டு இறங்குமாறு சிங்களத்தில் வற்புறுத்தியுள்ளனர்ää சுமார் 6 இராணுவத்தினர் வாகனத்திற்குள் இருந்ததாகவும் அனைவரும் அரச அதிரடிப்படையினரின் சீருடையுடனும் ஆயுதங்களுடனும் காணப்பட்டதாகவும் இவர்களின் கோரிக்கையினை சந்திரநேருவின் மெய்ப்பாதுகாவலர்கள் ஏற்க மறுத்த போது சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார். ஓவ்வொருவர் மீதும் பல டசின் ரவைகள் பாய்ந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் பயணம் செய்த வாகனத்திற்கு சுமார் 50 க்கு மேற்பட்ட ரவைகள் பாந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். Source : http://www.nitharsanam.com/?art=8666 - tamilini - 02-08-2005 :oops: :oops: - tamilini - 02-08-2005 தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டு. அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யனின் படுகொலை தொடர்பாக பாதுகாப்புப் பிரிவினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை தாம் நிராகரிப்பதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த படுகொலையுடன் கருணா குழுவினருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று சந்தேகிக்க போதிய காரணங்கள் இருப்பதாக தயா ரட்நாயக்க கூறினார். மட்டு. அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் வெலிக்கந்தை ஊடாக நேற்று மேற்கொண்ட பயணம் தொடர்பாக இராணுவத்தினருக்கு அறிவிக்கவில்லை என்றும்ää இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் பிராந்தியத் தலைவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பயணித்த வேளைகளில் இராணுவத்தினருக்கு அறிவித்தபோதுää அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டதாக பிரிக்கேடியர் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். puthinam.com - Malalai - 02-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> தமிழீழ விடுதலைப்புலிகளின் பிராந்தியத் தலைவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பயணித்த வேளைகளில் இராணுவத்தினருக்கு அறிவித்தபோதுää அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டதாக பிரிக்கேடியர் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> பொய் கூட ஒழுங்கா சொல்ல தெரியாத லூசுகள் :evil: :evil: :twisted: :twisted: - ramani - 02-08-2005 அதை காவும் ஊடகத்தை எப்படி சொல்வது. - shiyam - 02-09-2005 ramani Wrote:அதை காவும் ஊடகத்தை எப்படி சொல்வது.[/quote]ரமணி நீர் யாரென்று விழங்குகிறது பேசாமல் களத்தைவிட்டு போனால் நல்லது அல்லது எதிரியின் கால் நக்கி வாழவும் |