![]() |
|
என்ன செய்வதடா?- தொ. சூசைமிக்கேல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என்ன செய்வதடா?- தொ. சூசைமிக்கேல் (/showthread.php?tid=5319) |
என்ன செய்வதடா?- தொ. சூசைமிக்கேல் - hari - 02-10-2005 <b>என்ன செய்வதடா?</b> - தொ. சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com ) <img src='http://eelampage.com/news/20050210/kousalyan/gowsalyan.jpg' border='0' alt='user posted image'> கௌசல்யன்! எங்கள் கண்களுக்குள் இன்னமும் தரிசனம் தந்துகொண்டிருக்கும் கந்தர்வன்! பொன்னீழ மண்டலத்தின் புண்ணிய புதல்வன்! புதுச் சரிதம் தீட்டவந்த அரசியல் ஆலோசகன்! காலன் நெருங்கு முன்பாகவே, எங்கள் கௌசல்யனைக் காடையனின் கோரக் கரங்கள் கொள்ளை கொண்டுவிட்டன. செங்குருதி வெறிபிடித்து அலைகின்ற சிங்களக் கழுகுகளின் அலகுகளில் மீண்டும் தமிழனின் ரத்தச் சாயம்... இனக்கேடு தலைக்கேறிய குணக்கேடர்தம் கூடாரங்களில் இதோ! இன்னும் ஓர் பிணக்காட்டின் தொடக்க அத்தியாயம்... என்ன செய்வதடா? எதுவரை பொறுப்பதடா? ஆசையே அழிவுக்குக் காரணம் என்றுதானே அந்தப் போதிமரத்தான் போதித்தான்?.. அழிவின் மீதே ஆசைகொள்ளும் இந்த ஆலகாலப் பட்சிகள், அவனுக்கு எப்படியடா பின்காமிகள்? "இனியொரு விதி செய்வோம்!" என்ற உணர்வோடு இறங்கி வந்த ஈழத் தமிழனுக்குக் கிடைத்த பரிசு, "இனியொரு சதி செய்வோம்!" என்பதுதானா? என்ன செய்வதடா? எதுவரை பொறுப்பதடா? உலக நாடுகளே! உதவாத காரணத்திற் கெல்லாம் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள், ஒன்றும் பேசாமலிருப்பதேன்? தவறு நிகழ்ந்திடின் தட்டிக் கேட்பதாகத் தம்பட்டம் அடிக்கின்ற "சட்டாம்பிள்ளை" தேசங்களே! எங்கே போயிற்று உங்கள் எட்டப் பார்வை? ஈழத் தமிழனே! என்னருமைச் சோதரனே! - நீ கீழே வைத்துவிட்டாய் ஆயுதத்தை என்றறிந்து கிட்டே வந்துவிட்டான் பார்த்தாயா, சிங்களத்துச் செந்நாய்ச் சேய்? வீழத்தான் வேண்டுமோ? - உனக்கு விழுப்புண்தான் மீண்டுமோ? ஈழத்தான் வாழத்தான் வேண்டுமென்னும் வேட்கையுடன் எத்தனைநாட் காலந்தான் காத்திருக்க வேண்டுமோ? என்ன செய்வதடா? எதுவரை பொறுப்பதடா? - tamilini - 02-10-2005 Quote:தவறு நிகழ்ந்திடின் தட்டிக் கேட்பதாகத்அவர்களிற்கெல்லாம் எங்க இப்ப கண் தெரியும் காது கேக்கும்.. எல்லாம் செயலிழந்தல்லோ இருக்கும்.. நன்றியண்ணா. :? - Nitharsan - 02-10-2005 கவிதைக்கு நன்றி நேசமுடன் நிதர்சன் - Malalai - 02-10-2005 Quote:காலன் நெருங்கு முன்பாகவே, எங்கள் கௌசல்யனைக் அரசன் அன்று கொல்வான் தெய்வம் (அதுதாங்க நம்ம தலைவர்) நின்று கொல்வார் சிங்களவனுக்கு இருக்கு ஆப்பு.... :evil: :evil: கவிதைக்கு நன்றி ஹரி அண்ணா - sinnappu - 02-10-2005
- KULAKADDAN - 02-10-2005 கவிதைக்கு நன்றி - shanmuhi - 02-10-2005 கவிதைக்கு நன்றி - Niththila - 02-11-2005 கவிதைக்கு நன்றி அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- hari - 02-11-2005 மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் இ. கௌசல்யன் உட்பட ஏனைய போராளிகளின் பூதவுடல்கள் கொக்கட்டிச்சோலையிலிருந்து அம்பாறை நோக்கி பொதுமக்களின் அஞ்சலிக்காக ஊர்வலமாக எடுத்துச் செல்வதை இங்கு காண்கிறீர்கள் <img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/February/10/f-1.jpg' border='0' alt='user posted image'> - hari - 02-11-2005 <img src='http://eelampage.com/photos/thandiyadi20050211/photogallery/3.jpg' border='0' alt='user posted image'> <img src='http://eelampage.com/photos/thandiyadi20050211/photogallery/5.jpg' border='0' alt='user posted image'> <img src='http://eelampage.com/photos/thandiyadi20050211/photogallery/4.jpg' border='0' alt='user posted image'> <img src='http://eelampage.com/photos/thandiyadi20050211/photogallery/2.jpg' border='0' alt='user posted image'> - hari - 02-11-2005 கௌசல்யன் அண்ணாவின் இறுதிச் சடங்கின் ஒரு பகுதியை ஒளிவடிவில் பார்க்க www.harinet.tk சென்று Current News (Video) (சக்தி டிவி) கிளிக் செய்யவும் - tamilini - 02-11-2005 நன்றி அண்ணா.. இணைப்பு வேலை செய்யவில்லையே.. ஏன்..?? |