Yarl Forum
சிரிப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: சிரிப்பு (/showthread.php?tid=5284)



சிரிப்பு - Vaanampaadi - 02-13-2005

ரோட்டில் இரண்டு பேர், ஒரு பெரிய கம்பை நிறுத்தி அதன் உயரத்தை அளக்க பெரும்பாடு பட்டுக் கொண்டு இருந்தனர்.

அதை ஜார்ஜ் என்பவர் பார்த்து, அவர் களுக்கு உதவி செய்வதற்காக அந்த கம்பை தரையில் போட்டு அளந்து பார்த்து "22 அடி" என்று கூறினார்.

இதைக்கேட்ட அந்த இருவரும், "முட்டாளே! நாங்கள் இந்த கம்பத்தின் நீளத்தை அளக்க விரும்பவில்லை. உய ரத்தைத்தான் அளக்க விரும்புகிறோம்" என்றனர்.
-----------------------------------------------------------------------

அந்த வாலிபர், தனது காதலியை கட்டி அணைத்து இதழோடு இதழ் பதித்து முத்தமிட்டார்.

இதனால் குதூகலம் அடைந்த காதலி, "எனக்கு இதே போல மேலும் ஒரு முத்தம் கொடு. உன்னையே நான் திருமணம் செய்து கொள்கிறேன்" என்றாள்.

"உனது எச்சரிக்கைக்கு நன்றி" என்று கூறி கழன்று கொண்டார் காதலர்.

...........................................................................................................


கைத்தொலைபேசிக்கும் திருமணத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன?
இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தா நல்ல Model கிடைச்சிருக்கும்.

-----------------------------------------------------------------------

கண் ஆஸ்பத்திரியில் ஒரு காட்சி:_

"இடது கண்ணை மூடிக்கொண்டு வலது கண்ணால் பாருங்கள்."

"நன்றாக தெரிகிறது டாக்டர்."

"இப்போது வலது கண்"

"இதுவும் நன்றாக தெரிகிறது டாக்டர்"

"இப்போது இரண்டு கண்"

"ஒன்றுமே தெரியவில்லையே டாக்டர்"

"யோவ்! இரண்டு கண்களையும் மூடிக்கொண்டால் எப்படி தெரியும்?


- Vaanampaadi - 02-13-2005

தந்தை: ஏண்டா, ஏற்கனவே சட்டை கசங்கி போய் கந்தலா இருக்கு. அதை மேலும் கசக்கி விட்டு அப்புறமா போடுறீயே ஏன்?

மகன்: எங்க ஆசிரியர் கந்தை யானாலும் கசக்கி கட்டு என சொல்லி தந்திருக்கிறார்.

தந்தை: ? ? ?
........................................................................................................
ரமேஷ்: கல்யாண மாப்பிள்ளை உன்னை கட்டிப்பிடிச்சி ஆனந்த கண்ணீர் விட்டாரே எதுக்காக?

சுரேஷ்: நான் மொய்ப்பணம் கொடுப்பேன்னு அவரு எதிர்பார்க்கலியாம்!

ரமேஷ்: ???
-----------------------------------------------------------


- tamilini - 02-13-2005

ஆசிரியர் : பிள்ளைகளே உங்களுக்கு பழமொழி சொல்லுறன் கேழுங்க
கந்தையானாலும் கசக்கி கட்டு..

மாணவன் : கசக்கும் மட்டும் எதைக்கட்ட..??


- KULAKADDAN - 02-13-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->