Yarl Forum
எப்படி பிறந்தது? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: எப்படி பிறந்தது? (/showthread.php?tid=5282)



எப்படி பிறந்தது? - Vaanampaadi - 02-13-2005

எப்படி பிறந்தது?



கண்ணும் கண்ணும் கலந்ததால்

காதல் உருவானது.

மனிதனும் தெய்வமும் கலந்ததால்

மதம் உருவானது.

சாதியும் சாதியும் கலந்ததால்

கலவரம் உருவானது.

எதுவும் எதுவும் கலந்ததால்

சாதி பிறந்தது?

ஒய்.அருள்ஜெகன், வைராகுடி.

--------------------------------------------------------------
தொட்டு விடும் தூரம்



நாளையை எண்ணி

இன்றை உதறாதே.

நடந்ததை எண்ணி

நெஞ்சம் பதறாதே.

வேளை வரும் போது

கூடி வரும்.

கூடி வரும் வேளையோ

கோடி பெறும்.

நேற்றில் கால் பதித்து

இன்றில் நில்

நாளை உன் வசமாகும்.

நம்பிக்கையால்தான்

நடக்கிறது வாழ்க்கை.

தொய்வில்லா மனமிருந்தால்

தொலை தூரம் கூட

தொட்டு விடும் தூரம் தான்.