Yarl Forum
தாவூத் இப்ராகிம் தம்பியுடன் தொடர்பா? நடிகை நக்மா மறுப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: தாவூத் இப்ராகிம் தம்பியுடன் தொடர்பா? நடிகை நக்மா மறுப்பு (/showthread.php?tid=5266)



தாவூத் இப்ராகிம் தம்பியுடன் தொடர்பா? நடிகை நக்மா மறுப்பு - Vaanampaadi - 02-14-2005

<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/14/cinema/C189_Nagma-2.jpg' border='0' alt='user posted image'>
மும்பை, பிப்.14- மும்பையின் பிரபல தாதா தாவூத் இப்ராகிமின் தம்பியுடன் தொடர்பு உள்ளதாக எழுந்த கேள்விக்கு நடிகை நக்மா மறுப்பு தொpவித்துள்ளார்.

மும்பையின் பிரபல தாதா தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி ராnஜஷ் பஞ்சாரியா என்ற ஜம்போ. இந்த ராnஜஸ் பஞ்சாரியா தற்போது சி.பி.ஐ.காவலில் இருக்கிறhர். குட்கா தொழில்அதிபர்கள் 2 பேருக்கு தாதாக்களுடன் தொடர்பிருப்பதாக கூறப்படுவது பற்றி பஞ்சாரியாவிடம் போலீசார் விசாரித்து வருகிறhர்கள். இந்த நிலையில் பஞ்சாரியா போலீஸ் விசாரணையில் புதிய அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். நக்மாவுக்கு தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். -பிரபல நடிகை நக்மாவுக்கும் தாதாக்களுடன் தொடர்பு உள்ளது. தாவூத் இப்ராகிமின் இளைய சகோதரர் அனீஸ் இப்ராகிமுக்கு நக்மா மிகவும் நெருக்கமானவர். இதுபோக வேறுசில தாதாக்களுடனும் நக்மாவுக்கு தொடர்பு உண்டு. ஹவாலா மூலம் நக்மா ஏராளமான பணம் சம்பாதித்து இருக்கிறhர்† என்று பஞ்சாரியா வாக்குமூலம் அளித்திருக்கிறhர்.

இந்த குற்றச்சாட்டு பற்றி நக்மா நேற்று கருத்து கூறினார். அவர் கூறியதாவது

என் மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்ற குற்றச்சாட்டு. அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு. ஜhர்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நான் திரும்பி வந்திருக்கும் நிலையில் திட்டமிட்டே சிலர் இதுபோன்ற குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறhர்கள். இதற்கு பின்னால் எதிர்க்கட்சியினரின் சதி உள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டை கூறியவர் மீது நான் அவத}று வழக்கு தொடுப்பேன். என்னுடைய வக்கீல்களை கலந்து ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு நக்மா கூறியுள்ளார்.

மும்பை படவுலகத்துக்கும் பிரபல தாதாக்களுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருக்கும் தகவல் ஏற்கனவே வெளியானது அல்லவா? இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நடிகை நக்மாவுக்கும் மும்பையின் பிரபல தாதாக்களுக்கும் இடையில் b தாடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Dinakaran


- kavithan - 02-15-2005

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->