Yarl Forum
காதலர் தின றோஜா விற்பனைக்கு சவுதியில் தடை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: காதலர் தின றோஜா விற்பனைக்கு சவுதியில் தடை (/showthread.php?tid=5261)



காதலர் தின றோஜா விற்பனைக்கு சவுதியில் தடை - Vaanampaadi - 02-14-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40821000/jpg/_40821559_women203bafp.jpg' border='0' alt='user posted image'>
காதலர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை சிவப்பு றோஜாக்களை விற்பனை செய்ய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியாவில் உள்ள பூக்கடைகளுக்கு அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

காதலர் தினம் சவுதியில் கொண்டாடப்படுவதை தடுக்கும் வகையில் அங்கு கடைகளில் சிவப்பு மலர்கள், கரடிப் பொம்மைகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் சிவப்பு நிற அல்லது இதய வடிவிலான பரிசுப்பொருட்களை விற்க சவுதி நாட்டின் மதப் பொலிஸார் தடை விதித்துள்ளதாக மலர் விற்பவர்கள் கூறுகிறார்கள்.

ஆயினும் அதிகாரபூர்வமற்ற வகையில் விற்பனைகள் தொடர்வதாகவும், சில கடைகள் காதலர்களுக்கான பொருட்களை ரகசியமாக விற்க முயலுவதாகவும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.


- thamizh.nila - 02-15-2005

ஏன் அப்படி?? காரணம் என்னவாம்? எதற்காக தடுக்க பட வேண்டும்? இது அவர்கள் கலாச்சாரத்தில் இல்லாததாலா? :roll: