![]() |
|
புலிகளை தடை செய்ய கனடா மறுப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புலிகளை தடை செய்ய கனடா மறுப்பு (/showthread.php?tid=5207) |
புலிகளை தடை செய்ய கனடா மறுப்பு - Mathan - 02-17-2005 விடுதலைப்புலிகளை கனடாவில் தடை செய்ய கனடிய அரசு மறுப்பு விடுதலைப்புலிகளை கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினரின் வேண்டுகோளை கனடிய வெளிவிவகார அமைச்சர் பியர் பெற்றிக்குறு அவர்கள் நிராகரித்துள்ளார். அமெரிக்காää நோர்வே உட்பட பல நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் கனடாவில் மேற்கொண்டுää நிலைமையை சீர்கேட்டை அனுமதிக்க வேண்டாம் எனத் தம்மை கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 'விடுதலைப்புலிகளையும் உள்வாங்கி இயங்குவதன் மூலமே போர் நிறுத்தத்தை மேலும் வலுப்படுத்திää தொடர்ந்து பேணுவதற்கு உதவும் என நாம் திடமான நம்புகின்றோம். இந்த நேரத்தில் அவர்களை தடை செய்வதன் மூலம் எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை என்பதையும் நாம் உண்மையாக உணர்கின்றோம்ää" எனக் கனடிய வெளிவிவகார அமைச்சர் பியர் பெற்றிக்குறு தனது அமைச்சக உபகுழு குழுநிலை விவாதத்தின் போது எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார்;. 2001 செப்டம்பரில் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின் கனடாவிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ் இதுவரை 35 அமைப்புக்கள் பயங்கரவாத அமைப்புக்களாக பல்வேறு கட்டங்களாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக கனடாவில் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம்ää விடுதலைப்புலிகளையும் உள்ளடங்கி 6 தென்னாசிய அமைப்புக்களை தடை செய்யுமாறு கனடிய உளவுத்துறை வேண்டுகோள் விடுக்க கனடிய மந்திரிசபை விடுதலைப்புலிகளை தவிர்த்து ஏனைய அமைப்புக்களையே அப்போது தடை செய்யது. எனினும் வலதுசாரி போக்குடைய கனடிய எதிர்கட்சியான கன்சவேட்டிக் கட்சியும் வலதுசாரி மற்றும் புதிய குடிவரவாளர் எதிர்ப்பு பத்திரிகைகளும் அவ்வவ்போது விடுதலைப்புலிகள் தடை விடயத்தை கடினய பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும் தொடர்ந்தும் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Puthinam |