![]() |
|
பேனா செல்போன் அறிமுகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பேனா செல்போன் அறிமுகம் (/showthread.php?tid=5199) |
பேனா செல்போன் அறிமுகம் - Vaanampaadi - 02-17-2005 இந்தியாவில் முதன்முறையாக பேனா செல்போன் அறிமுகம் கொல்கத்தா, பிப்.17- ஹேயர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் முதன் முறையாக பேனா செல்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. "ஹேயர் இந்தியா" நிறுவனம் கொல்கத்தாவில் நேற்று 7 விதமான மாடல்களில் செல்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் பேனா செல்போனும் அடங்கும். இந்த பேனா செல்போனில் 300 கே பிக்சல் காமிராவும் அடங்கியுள்ளது. இந்த நவீன செல்போனின் விலை ரூ.14,940. இந்த ஆண்டில் மட்டும் 5 லட்சம் பேனா செல்போன்களை விற்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஹேயர் இந்தியா நிறுவனம் தற்போது ஆண்டுக்கு ஒன்றரை கோடி செல்போன்களை உற்பத்தி செய்து வருகிறது. சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு பகுதி, ஆப்பிரி;க்கா, தெற்கு ஆசியா போன்ற நாடுகளிலும் செல்போன்களை விற்று வருவது குறிப்பிடத்தக்கது. Dinakaran - sinnappu - 02-17-2005 அப்பு உத நான் கொலன்ட் பிளக் மாக்கெற்றில 3 வருசத்துக்கு முன்னம் பாத்திட்டனே ??? :wink: :wink: :wink: :wink: :wink: :wink: |