![]() |
|
எனது கற்பனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: எனது கற்பனை (/showthread.php?tid=519) |
எனது கற்பனை - Puyal - 03-16-2006 எனது கற்பனை மலர்ந்தது மலர்ந்தது தமிழ் ஈழம் தமிழ் மக்களின் மனதில் தனி ஈழம் முத்தென முத்தெனப் பிறந்தது அலை கத்திடும் கடலில் பிறக்கவில்லை செத்திடச் செத்திடப் பல உயிர்கள் அங்கே சினமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் கொடியினில் கொடியினில் புூக்கவில்லை கொடுந்தீ என்னும் போரில் பிறந்தது தமிழ் ஈழம் துணையெனத் துணையென நாம் கண்ட பல சொந்தங்கள் எமைப் பிரிந்திடவே பலமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் அரிதென அரிதெனப் பலர் சொன்னார் அதுவும் இன்று உருவாச்சு அரியணை அரியணை ஏறியது ஐ. நா சபையில் அமர்ந்திடவே துணையெனத் துணையென நாம் கண்ட துணைகள் மீண்டும் திரும்பாது துணையெனத் துணையெனத் தானிருப்பாள் என்றும் என்றும் எம் தமிழ் அன்னை. உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். - kavithan - 03-16-2006 வாழ்த்துக்கள் பரணி "எனது கற்பனை" அல்ல நியம் நன்றாக இருக்கிறது. மேலும் மேலும் சிறப்பான கவிதைகளை யாழில் படைக்க வாழ்த்துக்கள் - அனிதா - 03-16-2006 Quote:துணையெனத் துணையென நாம் கண்ட உங்கள் கற்பனையில் வந்த அனைத்து வரிகளும் நன்றாக இருக்கு பரணி ... வாழ்த்துக்கள் ... தொடர்ந்து எழுதுங்கள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Puyal - 03-17-2006 கவிதனும் அனிதாவும் எனக்குத் தந்த ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். நேரம் கிடைக்கும் போது கவிதை எழுத முயற்ச்சிக்கின்றேன். உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும் - வர்ணன் - 03-17-2006 நல்லதொரு கவிதை புயல் தொடர்ந்து எழுதுங்கள்! 8) - Rasikai - 03-17-2006 வாழ்த்துக்கள் ஆமா உங்கட பெயரை தமிழில எப்படி சொல்லுறது. நீங்கள் கற்பனை என்று சொன்னது கற்பனை அல்ல நிஜம். நன்றாக உள்ளது வாழ்த்துக்கள். தொடர்ந்து தாங்க - அருவி - 03-18-2006 கவி அழகாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் புயல். - வெண்ணிலா - 03-18-2006 kavithan Wrote:வாழ்த்துக்கள் பரணி "எனது கற்பனை" அல்ல நியம் நன்றாக இருக்கிறது. மேலும் மேலும் சிறப்பான கவிதைகளை யாழில் படைக்க வாழ்த்துக்கள் பரணியா? :roll: :roll: :roll: என்ன குழப்புறீங்க? புயல் உங்க கற்பனை நல்லா இருக்கு. நன்றி - Jeeva - 03-18-2006 நண்பா கவிதை சுப்பர் இன்னும் தொடர வாழ்த்துகள் - RaMa - 03-20-2006 அழகான கவிதை வாழ்த்துக்கள். - Puyal - 03-20-2006 எப்போ வருவாய். நான் நானாக இல்லை என உணர்ந்த நான் ஏனென நினைத்த போது தான் உன்னைக் கண்ட நினைவும் வந்தது உன்னைக் கண்ட பின்னே உன்னிடம் என்னை விட்டு வந்தது என் நினைவில் வந்தது உன் தாள் தரை தன்னில் பட்டால் தளும்பு வந்திடும் என்றெண்ணி தரையில் மலர்கள் விரித்து வைத்தேன் மலர் மேல் உன் பாதம் பட்டுக் கன்றியதால் நானே உனக்குத் தரையானேன் தென்றலை வென்ற உன்னை தென்றல் தொடவும் விரும்பாத நான் தென்றலுக்கும் புூக்களால் வேலியிட்டு வைத்தேன் புூக்களின் நறு மணத்தில் நீ திணறியதால் காற்றுக்கும் காவல் போட்டு வைத்தேன் காற்றையும் கடந்து மதியவள் உன்னைத் தொட்டதால் என் மதி கொண்டு நீ உள்ள நாள் முழுவதும் அம்மதியையும் அமாவாசையாக்கி வைத்தேன் முத்தமிழின் மூன்றாம் தமிழே என் வீடு தேடி நீ எப்போ வருவாய். உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். - Niththila - 03-20-2006 கவிதை நல்லாயிருக்கு புயல் உங்கட முன்றாம் தமிழ் உங்கட வீடுதேடி வர வாழ்த்துகள் - Jenany - 03-20-2006 2 கவிதையும் நல்லா இருக்கு புயல்....இன்னும் தொடர வாழ்த்துக்கள். |