![]() |
|
வலியது வாழும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வலியது வாழும் (/showthread.php?tid=5188) |
வலியது வாழும் - Vaanampaadi - 02-17-2005 பெயரினில் ஐக்கியம் செயலினில் அயோக்கியம் கயவரில் அதியுயர் கயவனே கவனி! உங்கள் தேசநலனுக்கு பங்கந் தரு தேசமென்று ஆங்கோர் போர் கொண்டீர் எண்ணெய்யில் பங்குபெற விரும்பும் சிலவாலுகள் பங்குபெற. சற்றலைற் கொண்டு -நீவிர் 'பெற்றெடுத்த' படங்கள் சிரிப்பென்ற சிரிப்பெல்லோ. டைனோசர் ஈராக்கில் ஒட்டகம் ஓட்டுதல் போலவும் சதாமும் பின்லாடனும் சதா சந்திச்சு பேரீச்சம்பழஞ் சாப்பிடல் போலவும் படமெடுத்துத் தர சீரிய சேவகர் கொண்டீர். உங்கள் அந்தப்புரங்களில் நீங்கள் அணுகுண்டுகள் செய்து அடுக்கி வத்திருப்பதும் இஸ்ரேலும், தாங்களும் மைனர் மாப்பிள்ளைகளாய் ஈவ்டீஸிங் செய்வதுவும் எவர்க்குமே தெரியாதே. 'சீ என்ன என்ன' சொல்லுறதோ அதையே தெய்வ வாக்காக்கி பிறகதையே வாக்காக்கி மீண்டும் நீவிர் அரசாள... தோ தோ நாய்க்குட்டிகளும் தோதாக உங்கள் பின்னாலே துள்ளிவர... பாவம் அவையும் யாது செய்யும்? ஒட்டுக்கேட்டல்களினால் சொந்தச் சுதந்திரத்திற்கே வக்கில்லாத போது உலகமைதிபற்றி எதைச்செய்து கிழிக்க. வலியது வாழும் - ஈர்ந்த வலியதுவும் வாழும். நிலைத்திருப்பது நிலையாமையன்றி வேறெதுவுமில்லை. கோடைகடந்தொருநாள் குலைநடுங்கக் குளிர்வருதல் புதிதில்லை சர்வதேச காவல்துறை ஐயா. வலையிலிருந்து சுட்டது - KULAKADDAN - 02-17-2005 சுட்டது நல்ல சு10டு... - வியாசன் - 02-17-2005 ஏகாதிபத்திய முகமூடிகள் பற்பல சந்தர்ப்பங்களில் கிழிக்கப்படுகறது. இந்த உலக பொலிஸின் அட்டகாசம் ஒரு நாள் அடங்கும். அன்றுதான் உலகம் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் |