Yarl Forum
நக்மா விவகாரத்தில் மர்ம முடிச்சுகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: நக்மா விவகாரத்தில் மர்ம முடிச்சுகள் (/showthread.php?tid=5177)



நக்மா விவகாரத்தில் மர்ம முடிச்சுகள் - Vaanampaadi - 02-18-2005

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/18-2-2005/18nagma.jpg' border='0' alt='user posted image'>
தீவிரவாதிகளுடன் தொடர்பு: நக்மா விவகாரத்தில் மர்ம முடிச்சுகள்

மும்பை, பிப். 18-

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை நக்மா. இவருக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலிக்கும் தொடர்பு, திருப்பதி கோவிலில் ரகசிய திரு மணம் செய்து கொண்டார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் நக்மா தீவிர காங்கிரஸ் பிரசா ரத்திலும் ஆன்மீகத்திலும் ஈடுபட்டு வந்தார். அவர் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

மும்பை தொடர்குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிமிற்கும் நக்மாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், அனீஸ் கொடுத்தனுப்பிய ரூ.10 லட்சம் பணத்தை பாந்திராவில் உள்ள நக்மாவின் வீட்டிற்கு சென்று கொடுத்ததாகவும் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான ஜமீருதீன் அன்சாரி சி.பி.ஐ. போலீசாரின் விசாரணையில் தெரிவித்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நடிகை நக்மா வின் வீட்டை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னையில் நடிகை நக்மாவின் தங்கை ஜோதிகா வீட்டிலும் தி.நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டல் களிலும் போலீசார் ரகசிய மாக கண்காணித்து வருகிறார்கள்.

இதுபற்றி நடிகை நக்மா கூறுகையில் எனது புகழை கெடுக்க சிலர் சதி செய்கிறார் கள். தேவை இல்லாமல் கட்டு கதைகளை உண்மை போல பரப்பி வருகிறார்கள். அன் சாரி வாக்குமூலத்தில் சொல்லி இருக்கும் நக்மா நான் அல்ல பெயர் குழப்பத்தில் என்னை தவறாக சுட்டி காட்டி விட்டதாக அவர் தெரிவித் தார்.

இதன் உண்மை பின்னணி என்ன? நடிகை நக்மா விவகாரத்தில் பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளன.

போலீசாரின் விசாரணை யில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாணிக்சந்த் குட்கா அதிபர் தாரிவாலுக்கும் கோவாகுட்கா அதிபர் ஜோஷிக்கும் இடையே தொழில் போட்டி நேரடியாக இருந்து வந்துள்ளது. தாரிலால் அரபு நாடுகளில் குட்கா விற்பனைக்காக தாவூத் இப்ராகிம் தயவை நாடியுள்ளார். ஜோஷி யின் மகன் சச்சினுக்கும் நடிகை நக்மாவிற்கும் நெருங்கிய பழக்கம் இருந் துள்ளது. இருவரும் ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்கள். சினிமா பிரமுகர்களுக்கும் சச்சின் தனது நண்பர் என்று அறிமு கப்படுத்தி உள்ளார் போன்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கிடையே கடந்த 4 மாதங்களாக குட்கா அதி பர்கள் பிரச்சினை இருந்ததை போலீசார் கண்டு கொள்ளா மல் இருந்தது ஏன்? கடந்த ஆண்டுடிசம்பர் 3-ந்தேதி அவர்கள் துபாய் தப்பி செல் லும் வரை காத்திருந்து அதன் பின்னர் சம்மன் அனுப்பியது ஏன்? டிசம்பர் 31-ந்தேதி ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை போலீசார் பிறப் பித்துள்ளனர். இதே போல் நக்மா மீது தாவூத் இப்ராகீமின் கூட்டாளி அன்சாரி தெரி வித்த தகவல்களை பெரிது படுத்தாமல் விடுவது ஏன்? என்பது போன்ற மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாம லேயே இருக்கின்றன.

இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை அதிகாரியிடம் கேட்டபோது, "ஜமிரூதீன் அன்சாரி வாக்குமூலத்தில் என்ன தெரிவித்தான் என்பது எனக்கு முழுமையாக தெரியாது" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே டெல்லியில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு துபாயில் தலைமறைவாக இருக்கும் ஜோஷி பேட்டி அளித்துள்ளார். அதில் 97-98ம் ஆண்டு எனது குடும்பத்தினருடன் துபாய் சென்ற போது மாணிக் சந்த் அதிபர் தாரிலாலை சந்திக்க தாவுத் இப்ராகிமின் தம்பி முஷ்பாகிம் சந்திக்க வந்தார். அப்போது அவர்களுக்குள் கமிஷன் பிரச்சினை இருந்தது. பின்னர் 2000-ம் ஆண்டில்தான் பிரச்சினை தீர்ந்தது. எனக்கு தாவூத்தின் மைத்துனர்கள் ஹமீது, சலீம் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். நிழல் உலக தாதாவுடன் தொடர்பு வைக்காதீர்கள் என்று தாரிலாவை பலமுறை எச்சரித்தேன். ஆனால் அவர் எனது கட்டுப்பாட்டில் இல்லை. இனி நான் நினைத்தாலும் இத்தொடர்பை விடமுடியாது. என்னையாவது விட்டுவிடு என்று கெஞ்சினேன். நான் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியதால் நிழல் உலக தாதாக்கள் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது பேட்டியைத் தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் தற்போது குட்கா அதிபர்களை பிடிக்க துபாய் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் கோவா குட்கா அதிபர் ஜோஷியின் பேட்டியைத் தொடர்ந்து தாரிலாவின் வக்கீல் ராஜேந்திரஷிரோத்கர் கூறுகையில் தாரிலாலுக்கும் தாதாக்க ளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.தாவூத் இப்ராகிம் அரபு நாடுகளில் மாணிக்சந்த் குட்கா இறக்குமதி செய்து விநி யோகிக்கிறார் என்பது தவறான தகவல். தாரிலாலின் புகழை கெடுக்க ஜோஷி திட்டமிட்டு இதுபோன்ற பொய் பிரசாரம் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மாலைமலர்