![]() |
|
ஆபாசம் காட்டினால் ரூ.2 கோடி அபராதம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ஆபாசம் காட்டினால் ரூ.2 கோடி அபராதம் (/showthread.php?tid=5176) |
ஆபாசம் காட்டினால் ரூ.2 கோடி அபராதம் - Vaanampaadi - 02-18-2005 ஜானெட் ஜாக்சன் டான்ஸ் எதிரொலி மேடைகளில் ஆபாசம் காட்டினால் ரூ.2 கோடி அபராதம் அமெரிக்காவில் புதிய சட்டம் வாஷிங்டன், பிப். 18_ அமெரிக்காவில் மேடையில் நடனம் ஆடிய ஜானெட் ஜாக்சன் ஜாக்கெட்டை கிழித்துப்போட்டு விட்டு `டான்ஸ்' ஆடியதன் காரண மாக அந்த நாட்டில் புதிய சட்டம் கொண்டு வரப் பட்டு உள்ளது. அதன்படி மேடைகளிலோ, டி.வி. சேனல்களிலோ கண்ணியக் குறைவாக நடந்து கொண் டால் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் படும். மைக்கேல் ஜாக்சனின் தங்கை உலகப்புகழ் பெற்ற `பாப்' பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தங்கை ஜானெட் ஜாக்சன். இவர் கடந்த ஆண்டு `சூப்பர் பவுல்' விளையாட்டுப் போட்டியின் இடைவேளையின்போது மேடையில் இசை நிகழ்ச்சி நடத் தினார். அப்போது ஜாக் கெட்டை கிழித்துப்போட்டு விட்டு மார்பு தெரியும்படி நட னம் ஆடினார். இது டி.வி. சேனல்களில் நேரடியாக ஒளி பரப்பானது. இதற்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் புதிய சட்டம் கொண்டுவரப் பட்டு உள்ளது. ரூ.2 கோடி அபராதம் கண்ணியக் குறைவாக கலை ஞர்கள் நடந்து கொண்டாலோ அல்லது அதை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பினாலோ அவற்றின் மீது 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று இந்த சட் டம் கூறுகிறது. இந்தச் சட்டத்தை அமெரிக்கப் பாராளுமன்றத்தில் 389 பேர் ஆத ரித்தனர். 38 பேர் எதிர்த்தனர். ஏற்கனவே உள்ள சட்டப்படி அபராதத் தொகை வெறும் 16 லட்சம் ரூபாய்தான். அபராதத் தொகை மிகக் குறைவாக இருந்த தால் இந்தச் சட்டம் பற்றிய பயம் இல்லை. எனவே இந்த அபராதத் தொகை உயர்த்தப்பட்டு உள் ளது. ரத்து கண்ணியக் குறைவாக நடந்து கொண்டால் கலைஞர்களுக்கும், டி.வி. சேனல்களுக்கும் அப ராதம் விதிக்கப்படும். இந்தச் சட்டத்தை 3 முறை மீறி னால், டி.வி. சேனலின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். அது தவிர 30 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தினதந்தி - shanmuhi - 02-18-2005 நல்ல சட்டம். வரவேற்போம். - shiyam - 02-18-2005 அப்படி யானால் அவர்கள் காட்டுகிற விளம்பரங்களிற்கும் சேத்துதானே இந்த சட்டம்??? :? :? |