Yarl Forum
இணைய இணைப்பை பங்கிடுவது எவ்வாறு ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: இணைய இணைப்பை பங்கிடுவது எவ்வாறு ? (/showthread.php?tid=5101)



இணைய இணைப்பை பங்கிடுவது எவ்வாறு ? - VERNON - 02-21-2005

இணைய இணைப்பு 1024Ko (DSL) எவ்வாறு 8 கணனிகளுக்கு 128Ko வீதம் பங்கிடலாம்.

Windows 2000Server (with out ActivreD) and 8 Client Windows 2000
ஒவ்வொரு கணனியும் ஆகக் கூடிய அளவாக 128 Ko பயன்படுத்த வேண்டும்

இதனை எவ்வாறு செய்யலாம் ?


முன்னர் நான் கேட்ட வினாவிற்கு விடைபகன்ற அனைவருக்கும் நன்றி
உங்கள் உதவியுடன் குறிப்பாக இராகவா அவர்கன் வழங்கிய ஆலோசனையுடன் என் நோக்கம் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது
அனைவருக்கும் நன்றிகள்

நன்றியுடன்
VERNON


- tamilini - 02-21-2005

நீங்களே ஒரு சின்ன நெற்வேர்க்கை உருவாக்கலமே 8 கணணிகள் என்றால். Hub.. switch router அப்படி எதையும் பயன்படுத்தி.. செய்யலாம் என்று நினைக்கிறன்.. பொறுங்கோ நம்ம வித்துவான்கள் வந்து பதில் அனுப்பிவினம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வியாசன் - 02-21-2005

எங்கடை மேதவிக்குட்டி சொன்னால் மறுபேச்சு பேச இடமில்லை அவ சொன்னதை செய்யுங்கள். ஒரு 8கணனிக்கு பகிரக்கூடிய Hub வாங்குங்கள். ethernet மூலம் இணைப்பு கொடுங்கள்


- tamilini - 02-21-2005

நான் சொன்னது சரியா..?ஃஃ அப்ப எங்கையோ வாசிச்சது வேர்க் பண்ணுது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 02-21-2005

switch பாவிக்கும் போது IP Address குறித்த பிரைச்சனை இருக்கும் என்று நினைக்கின்றேன். DSLக்கு router இலகுவானது Desktop Copmputersக்கு Cable மூலமும் Laptop Computers க்கு Wireless மூலமும் இணைய இணைப்பை ஏற்படுத்தலாம்.


- Mathan - 02-21-2005

இந்த இரண்டு இணைய பக்கங்களையும் படித்து பாருங்கள். அனைத்து விபரங்களும் இருக்கின்றன

http://www.pcworld.com/howto/article/0,aid...d,108740,00.asp

http://www.broadbandbuyer.co.uk/default_Sh...upID=12&Alt=Yes


- Mathan - 02-21-2005

நீங்கள் இங்கிலாந்தில் இருக்கின்றீர்கள் என்றால் PC World கடைகளில் routerஐயும் மற்றய இணைப்பு கருவிகளையும் வாங்கலாம். அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒரு broadband packageஆக Offer போட்டிருக்கின்றார்கள். மலிவாக வாங்கலாம்.


- VERNON - 02-21-2005

கணனிகள் அனைத்தும் Network ல் இணைக்கப்பட்டுள்ளன. இணைய இணைப்பும் windows2000Server ஊடக பகிரப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு கணனியில் கூடுதலாக பதிவிறக்கங்கள் நடைபெறும் பொழுது மற்றய கணனிகளில் இணைய இணைப்பின் வேகம் குறைகின்றது . இதனை தவிர்ப்பதற்காகவே இணைப்பிற்கு வேக வரம்பினை வைக்க விரும்புகின்றேன் .
நன்றி
VERNON


- VERNON - 02-22-2005

எனது இணையப் பங்கீட்டிற்கு ஆலோசனை கூறிய உங்களிற்கு என் நன்றிகள்

நான் SoftPerfect Bandwidth Manager மூலம் இணைய பங்கீட்டினை செய்கின்றேன் உங்களுக்கும் உதவலாம்
கீழ்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்
http://www.softperfect.com/
நன்றியுடன்
VERNON


- kavithan - 02-22-2005

இந்த மென்பொருள் பற்றி கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா.. இது குறித்து ஒரு முனனுபவமும் எனக்கு இல்லை. உங்கள் தகவலுக்கு நன்றி.


- VERNON - 02-23-2005

IP முகவரி அல்லது முகவரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு விதிகளை அமைப்பதன் மூலம் அவற்றின் இணைய இணைப்பு வேகத்தை கட்டுப்படுத்தி அனைத்து USER ம் தடையின்றி இணைப்பை பங்கிட முடியும். HELP ல் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது முயன்று பாருங்கள்.
VERNON