Yarl Forum
இலங்கையில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இலங்கையில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி (/showthread.php?tid=5099)



இலங்கையில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி - Vaanampaadi - 02-21-2005

பிப்ரவரி 21, 2005

இலங்கையில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி

கொழும்பு:

கொழும்புக்கு அருகே நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாயினர். 30 பேர் காயமடைந்தனர்.


அமெரிக்க முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோர் இலங்கையில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மாலத்தீவுகளுக்குக் கிளம்பிய நிலையில் எம்பிலித்தியா என்ற இடத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியொருவரின் வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது அந்த நபர் கையெறி குண்டை நீதிமன்றத்துக்குள் வீசியதாகத் தெரிகிறது.

இந்த குண்டு வெடித்துச் சிதறியதில் நீதிமன்றத்தில் இருந்த சிறை அதிகாரி, ஒரு பெண் மற்றும் இன்னொரு நபர் பலியாயினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் எம்பிலிதியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பையடுத்து ஏற்பட்ட குழப்பத்தால் நீதிமன்றத்தில் இருந்து 12க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பல பகுதிகளை புஷ், கிளின்டன் ஆகியோர் கடந்த இரு தினங்களாகப் பார்வையிட்டனர். இதனால் அவர்கள் பயணித்த பகுதிகள் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டது.

அவர்கள் மாலத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், நீதிமன்றத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.


Thatstamil


- tamilini - 02-21-2005

தமிழ்க்கைதிகள் விவகாரமா..?? :?


- வியாசன் - 02-21-2005

இல்லைப்பிள்ளை அது பாதாளஉலக கைதிகளை தப்பவைக்க எடுத்த முயற்சியாம் .அவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்