Yarl Forum
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பரபரப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பரபரப்பு (/showthread.php?tid=5097)



ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பரபரப்பு - Vaanampaadi - 02-21-2005

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் பரபரப்பு

ஆஸ்திரேலியாவில் Melbourne அனைத்துலக விமான நிலையத்தில் காத்திருந்த 15-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலையத்தில் காத்திருந்த அப்பயணிகளுக்கு திடீரென்று மயக்கம், மூச்சுதிணறல்,
வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. உடனடியாக அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

இச்சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லையென மூத்த அதிகாரியான Brooke Lord தெரிவித்தார். இரசாயன வாயுக்கசிவால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வணக்கம்மலேசியா