Yarl Forum
ஜனதா விமுக்தி பேரமுனா மிரட்டல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஜனதா விமுக்தி பேரமுனா மிரட்டல் (/showthread.php?tid=5025)

ஜனதா விமுக்தி பேரமுனா மிரட்டல் - aathipan - 02-25-2005

விடுதலைப்புலிகளுக்கு அதரவாக செயல் பட்டால் கூட்டணி அரசில் இருந்து விலகி விடுவோம் என்று இலங்கை அரசுக்கு ஜனதா விமுக்தி பேரமுனா கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.

இலங்கையில் அதிபர் சந்திரிகாவின் இலங்கை விடுதலை கட்சி ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியை சேர்ந்த ராஜ பச்சே பிரதமராக இருக்கிறார். ஆளும் கூட்டணியில் ஜனதா விமுக்தி பேரமுனா கட்சியும் இடம் பெற்றுள்ளது.

இந்த கட்சி விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்து வருகிறது.

இதற்கிடையே விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தைகளை தொடங்க தமிழர் பகுதிக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட சில நிபந்தனை விதித்து உள்ளது.

இதுபற்றி ஜனதா விமுக்தி பேரமுனா கட்சி எம்.பி. வீரவல்சா கூறும்போது "விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்கக்கூடாது.

முதலில் விடு தலைப்புலிகள் சமரச பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கோரிக்கைகள் பற்றி அரசு கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசியபிறகுதான் கோரிக்கை பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இலங்கை அரசு செயல்பட்டால் கூட்டணி அரசில் இருந்து நாங்கள் விலகி விடுவோம்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

கூட்டணி கட்சியின் இந்த மிரட்டல் காரணமாக இலங்கை அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

- வியாசன் - 02-25-2005

அப்பு கடிக்கிற நாயள் கலைக்காது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- cannon - 02-25-2005

இந்த JVP நாயள் கடிக்க மாட்டுது!, ஒட்டியிருக்கிற சொறிநாய்கள்! அடிச்சுக் கலைத்தாலும் ஓடாத ஒட்டுண்ணிகள்!