![]() |
|
ஐ.நா. குழு வழிகாட்டலை ஏற்க இலங்கை மறுப்பு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஐ.நா. குழு வழிகாட்டலை ஏற்க இலங்கை மறுப்பு! (/showthread.php?tid=5024) |
ஐ.நா. குழு வழிகாட்டலை ஏற்க இலங்கை மறுப்பு! - Vaanampaadi - 02-25-2005 ஐ.நா. மனித உரிமைகள் குழு வழங்கிய வழிகாட்டலை ஏற்க இலங்கை மறுப்பு! சட்டம் இடமளிக்காது என விளக்கம் தெரிவிப்பு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை நீதிமன்றத்தினால் 35 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழர் ஒருவரை விடு விக்குமாறு அல்லது அவர் தொடர்பாக வழக்கை மறு விசாரணை செய்வதோடு அவருக்கு உரிய நஷ்டஈடு வழங்குமாறு இலங்கை அரசுக்கு ஐ.நாவின் மனித உரிமைகள் குழு வழங்கிய வழிகாட்டலை ஏற்பதற்கு இலங்கை மறுத்து விட்டது. இலங்கைத் தமிழரான சிங்கராசா நல்லரட் ணம் என்பவர் தொடர்பாக சிவில் மற்றும் அர சியல் உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனங் களுக்கு அமைவாக ஐ.நா. மனித உரிமைகள் குழு விடுத்த வழிகாட்டலை ஏற்கனவே இலங்கை மறுத்திருக்கின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற் றம் சுமத்தப்பட்ட சிங்கராசா நல்லரட்ணத்துக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந் தது. இதனை ஆட்சேபித்து சிங்கராசா சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த மேன்முறையீட்டு நீதி மன்றம் அந்த சிறைத் தண்டனையை 35 ஆண்டு களாகக் குறைத்துத் தீர்ப்பளித்தது. அதையும் ஆட்சேபித்து உயர் நீதிமன்றத் தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மேன் முறையீட்டை விசாரணை செய்த உயர் நீதி மன்றம் சிங்கராசாவுக்கு மேன்முறையீட்டு நீதி மன்றம் வழங்கிய 35 ஆண்டு காலச் சிறைத் தண்டனையை உறுதிசெய்தது. இந்த நீதிமன்ற முடிவுகளை ஆட்சேபித்து மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவரிடம் சிங்கராசா சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த மனித உரிமைகளுக் கான ஐ.நா குழு சிங்கராசா விடயத்தில் அவ ருக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தது. அவரது மூலவழக்கு விசா ரணை மற்றும் மேன்முறையீடுகள் மீதான விசா ரணைகளில் வேண்டுமென்றே காலதாமதம் செய்து காலம் இழுத்தடிக்கப்பட்டுள்ளது என் றும் - விசாரணை முறைகளுக்கு தண்டனைத் தீர்ப் பும் முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயன் - poo - 02-25-2005 சிங்கராசா தமிழன் தானே |