Yarl Forum
விவாகரத்து பிரித்த மெழுகுச்சிலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: விவாகரத்து பிரித்த மெழுகுச்சிலை (/showthread.php?tid=5020)



விவாகரத்து பிரித்த மெழுகுச்சிலை - Vaanampaadi - 02-25-2005

விவாகரத்து பிரித்த மெழுகுச்சிலை

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மிïசியத்தில் ஆலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் பிராட்பிட், அவர் மனைவியும் டி.வி. நடிகையுமான ஜெனீபர் அனிசன் ஆகியோர் ஜோடி யாக நிற்பது போல மெழுகுச்சிலை வைக்கப்பட்டு இருந்தது.

2000_ம் ஆண்டு இவர்கள் திரு மணம் செய்து கொண்டனர். 2004_ம் ஆண்டு இவர்களுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டது. ஆனால் இப் போது இந்த ஜோடி பிரிந்துவிட்டது.

மிïசியத்தில் ஜோடியாக இருக் கும் சிலையையும் பிரிக்க வேண்டும் என்று மியுசிய சிலை வடிப்பாளர்கள் வற்புறுத்தப்பட்டனர். இதனால் சிலை பிரிக்கப்பட்டது.

ஒருவர் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு இருப்பது போல சிலை வடிவமைக்கப்பட்டு இருந்ததால், சிலையைப் பிரிக்க நிறைய நேரமும், நிறையச் செலவும் ஆனதாக மிïசிய நிர்வாகிகள் கூறினர்.

Dailythanthi


- Malalai - 02-25-2005

அட அதக்கூட பிரிச்சிட்டாங்களா.....அத பார்த்தாவது மனம் திருந்த இருந்ந ஒரு வாய்ப்பை இல்லாமா பண்ணிடினமே.....