Yarl Forum
பாராளுமன்றத்தில் தமிழில் கவிதை பாடிய ஜனாதிபதி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பாராளுமன்றத்தில் தமிழில் கவிதை பாடிய ஜனாதிபதி (/showthread.php?tid=5018)



பாராளுமன்றத்தில் தமிழில் கவிதை பாடிய ஜனாதிபதி - Vaanampaadi - 02-25-2005

பாராளுமன்றத்தில் தமிழில் கவிதை பாடிய ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய ஜனாதிபதி அப்துல்கலாம் "நாம் எங்கு இருக்கிறோம்," என்ற தலைப் பில் தமிழில் ஒரு கவிதை வாசித்தார். இன்று காலை தான் அந்த கவிதையை எழுதி யதாக கூறிய அவர் அதை நிதானமாக வாசித்துக் காட்டினார். அந்த கவிதை வருமாறு:-

எங்கிருக்கிறோம் நாம்,
என்னருமை நண்பர்களே,
இந்திய மக்களின்
இதயவொலி அழைப்பிற்கு,
வரலாற்று வடிவம் தரும்
மகாசபையில்
இருக்கின்றோம்.
மக்கள் நமை கேட்கிறார்கள்.
மக்கள் நமை கேட்கிறார்கள்;
"பாராளுமன்றத்து பாரதத் தாய் சிற்பிகளே,
எங்களது வாழ்விற்கு வளங் கொடுங்கள், ஒளி கொடுங்கள்.
உங்களது நல்லுழைப்பே,
எங்களுக்கு ஒளிவிளக்கு
உயர்ந்திடலாம் நாமெல்லாம்,
உண்மையிலே நீவிர்
உழைத்தால்"
அரசன் எவ்வழியோ, குடிகள் அவ்வழியே.
வளருங்கள் எண்ணத்தில். உயருங்கள் செயலில் நீர்.
வாய்மை முறை உங்களுக்கு,
வழித்துணையாய் ஆகட்டும்.
நீவிர் எல்லோரும் வாழ்க! இறைகருணையால் என் றென்றும்.

Maalaimalr


- வியாசன் - 02-25-2005

நீங்கள் எழுதிய தலைப்பை பார்த்து பலர் மயங்கிவிழப்போகிறார்கள்
சந்திரிகா என்று எண்ணி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-25-2005

உண்மையா நான் அப்படித்தான் நினைச்சன்.. கலாமுக்கு ஒரு சலாம்.. :wink:


- Mathuran - 02-25-2005

இந்திய சனாதுபதி திரு அப்துல் கலாம் அவர்கள் தன்னை வளர்த்த தமிழ் அன்னையை மறக்காது, தமிழ் அன்னைக்காய் கவி பாடியது அவர் தமிழ் அன்னையின் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடு. அவரை வாழ்த்துவோம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


ஜனாதிபதி - eelapirean - 02-25-2005

வியாசன் நினைத்த மாதிரி நானும் நினைத்து ஆச்சரியத்துடன் பார்த்தால் அது நம்ம பக்கத்து நாட்டு ஜனாதிபதி


- Malalai - 02-25-2005

இவரால் நிச்சயமாக தமிழுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasanthan - 02-25-2005

வியாசன் சொன்ன மாதிரித்தான் நினைத்து வந்து பார்த்தேன். :twisted: