Yarl Forum
இக்கணத்தில் நான் - தயா ஜிப்ரான்- - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இக்கணத்தில் நான் - தயா ஜிப்ரான்- (/showthread.php?tid=5014)



இக்கணத்தில் நான் - தயா ஜிப்ரான்- - Thaya Jibbrahn - 02-25-2005

என்
மொத்த பலவீனங்களையும் திரட்டி
மௌனம் எனும்
கோட்டையெழுப்பினேன்.

பலவீனங்களை கண்டறிந்து
கோட்டையை
தாக்கினர்ய்
கைப்பற்றினாய்.

எந்த
எதிர்தாக்குதலும் இன்றி
பணிந்துபோனது
எனது
மௌனங்களின் அரசாட்சி.

பாதுகாப்பு வேலிகள்
சிதிலமாகி
சின்னாபின்னமாய் கிடக்கிறது
என்
அரண்மனை.

என்ன செய்வதாய்
உத்தேசம். ????

என்
மனக்கோட்டையில்
நீயும் வாழ்வதாயில்லை
வாழ்ந்த என்னை
விடுவதாயுமில்லை.

உன்னிடம்
பணிந்து போனதைக்காட்டிலும்
போரிட்டு மரணித்திருப்பின்
மகிழ்ந்திருப்பேன்
இக்கணத்தில் நான்.

- தயா ஜிப்ரான்-


- tharma - 02-26-2005

ஆகா என்னுடைய வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டியதற்கு நன்றி Cry Cry Cry Cry


- kavithan - 02-27-2005

நன்று...நன்று.. உங்கள் கவிதைகள் தொடரட்டும்