Yarl Forum
சுனாமி நிவாரண பொருட்களை ஏனையோருக்கு திருப்பி விட்டிருப்பதாக. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சுனாமி நிவாரண பொருட்களை ஏனையோருக்கு திருப்பி விட்டிருப்பதாக. (/showthread.php?tid=4996)



சுனாமி நிவாரண பொருட்களை ஏனையோருக்கு திருப்பி விட்டிருப்பதாக. - Vaanampaadi - 02-26-2005

சுனாமி நிவாரண பொருட்களை ஏனையோருக்கு திருப்பி விட்டிருப்பதாக ஒப்புக்கொள்கிறார் சமூக சேவைகள் அமைச்சர்
25 02 2005
சுனாமி அனுதாபத்தில் சர்வதேச நாடுகளிடம் இருந்து வந்த நிவாரண உதவி பொருட்கள் சிறீலங்காவின் தென் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்படாதவர்களுக்கு திருப்பப்படுகின்றன என்பதை சிறீலங்காவின் சமூகசேவைகள் அமைச்சர் திருமதி சுமேதா ஜயசேன ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் சுனாமி நிவாரணத்துக்கு வந்த உதவி பொருட்கள் தேவைக்கு அதிகமாக இருக்கின்றன என்றும் அதனால் பால்மா புட்டியிலடைத்த மீன் தண்ணீர் போத்தல் என்பவற்றை வயோதிபர் சிறுவர் வலம்குறைந்தோர் இல்லங்களுக்கு அனுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே உணவு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன அவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும்மேலதிக உணவுகளை ஏனையோருக்கு வழங்காது விட்டால் அவை வீணாகிப் போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுனாமியால் பாதிக்கப்பட்டு 94ஆயிரம் மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றார்கள். மேலும் 407ஆயிரம் பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்கள். இப்போது தேவைப்படுவது அவர்களுக்கு வீடுகளை கட்டி கொடுப்பதே என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சுனாமி நிவாரண பொருட்களை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கையாடுவது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை கிடைக்காது தடுப்பது கொழும்பு துறைமுகத்தில் 150 கொள்கலன்களில் நிவாரண பொருட்கள் முடக்கி வைக்கப்பட்டிருப்பது பற்றிய செய்திகள் உள்ளூர் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

செய்திகோவை