![]() |
|
சம்பிக்க ரணவணவக்கவின் கூற்று தமிழ் மக்களை அழிப்பதற்கு எடுக்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சம்பிக்க ரணவணவக்கவின் கூற்று தமிழ் மக்களை அழிப்பதற்கு எடுக்க (/showthread.php?tid=499) |
சம்பிக்க ரணவணவக்கவின் கூற்று தமிழ் மக்களை அழிப்பதற்கு எடுக்க - Mathuran - 03-19-2006 சம்பிக்க ரணவணவக்கவின் கூற்று தமிழ் மக்களை அழிப்பதற்கு எடுக்கும் முயற்சியே –- எழிலன். ஜாதிக ஹெல உறுமிய கொள்கை வகுப்பாளர் சம்பிக்க ரணவணவக்க அவர்களின் கூற்று தமிழ் மக்களை இந்நாட்டில் இருந்து அழிப்பதற்கு எடுக்கும் முயற்சியாகவே அமைகின்றது. 125,000 இராணுவத்தினரால் தாக்குப்பிடிக்க முடியாத நிலையிலேயே விடுதலைப்புலிகளுடன் அரசாங்கம் பேச்சுக்கு வந்தது. ஆனால் விடுதலைப்புலிகளை அழிக்க தாங்கள் 10,000 பேரை புதிதாக இராணுவத்தில் இணைத்து புலிகளை அடக்குவோம் எனத் தெரிவித்திருப்தாவது தமிழ் மக்கள மீதான ஆவேசத்தைக் காட்டுவதாக இருக்கின்றது. இவ்வாறு திருகோணமலை மாவட்ட விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரயில் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்தார். மூதூர் பிரதேச தேசிய எழுச்சி பேரைவையினருடனான சந்திப்பு ஒன்று கணேசபுரம் மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அரசியல் பொறுப்பாளர் எழிலன் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள 40,000 படைவீரர்களை விடுதலைப்புலிகள் கொன்றால் கொழும்பில் உள்ள 4 இலட்சம் தமிழ் மக்களது பிரேத பெட்டிகளை நாங்கள் வன்னிக்கு அனுப்பி வைப்போம் என்று தெரிவித்துள்ளார். படையினர் மீதான தாக்குதல்களுக்கு தமிழ் மக்கள் பலியாக்கப்பட முடியாது. எமது மக்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்து அவற்றை உயர் பாதுகாப்பு வலயம் என்று ராணுவத்தினர் கூறிவருகின்றனர். அவ்வாறான இடங்கள்மீட்கப்பட வேண்டும். இதற்காக போரிடும் நாம் படைகளை கொன்றால் தமிழ் மக்கள கொல்லப்படுவார்கள் என்று தெரிவித்திருப்து ஆயுதம்மின்றிய மக்கள் மீதான தாக்குதலாக அமையலாம். இதைத்தான் காலம் காலமாக அவர்கள் செய்தும் வந்துள்ளனர், இவ்வாறான பேச்சுகள் நாம் எங்களது நிலங்களை மீட்டெடுத்தே ஆக வேண்டும என்ற எண்ணத்தினை மேலும் வலுப்படுத்துகின்றன. என்றும் தெரிவித்தார். நன்றி பதிவு இனையத்தளம் |