Yarl Forum
கடலோர கிராமங்களில் கடற்படையினர் திடீர் தாக்குதல்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கடலோர கிராமங்களில் கடற்படையினர் திடீர் தாக்குதல்! (/showthread.php?tid=492)



கடலோர கிராமங்களில் கடற்படையினர் திடீர் தாக்குதல்! - Vaanampaadi - 03-20-2006

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடலோர கிராமங்களில் கடற்படையினர் திடீர் தாக்குதல்!
[திங்கட்கிழமை, 20 மார்ச் 2006, 15:49 ஈழம்] [ம.சேரமான்]
திருகோணமலை மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடலோர கிராமங்களின் மீது சிறிலங்கா கடற்படையினர் இன்று திங்கட்கிழமை காலை முதல் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.


இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கூறியதாவது:

திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் கிழக்கின் கடலோர கிராமங்களான சம்பூர், சூடைக்குடா, கோணித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராமங்களின் மீது திங்கட்கிழமை காலை 11 மணி முதல் சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

டோரா மற்றும் இரண்டு நீருந்து விசைப் படகுகளிலிருந்து இந்த தாக்குதலை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. பல வீடுகள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளன.

இதர சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட நகர போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் கடலோர கிராமங்களைச் சென்று பார்வையிடுமாறு கண்காணிப்புக் குழுவினரை கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார் எழிலன்.


Puthinam