![]() |
|
தமிழ்ச்செல்வன் வருவதற்கு இ.தொ.காவும் எதிர்ப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழ்ச்செல்வன் வருவதற்கு இ.தொ.காவும் எதிர்ப்பு (/showthread.php?tid=4912) |
தமிழ்ச்செல்வன் வருவதற்கு இ.தொ.காவும் எதிர்ப்பு - Vaanampaadi - 03-03-2005 மலையகத்துக்குத் தமிழ்ச்செல்வன் வருவதற்கு இ.தொ.காவும் எதிர்ப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை மலையகத்திற்குக் கூட்டிவர சில அரசியல் தலை வர்கள் முயற்சி எடுத்து வருகின்றார்கள் என வெளியான செய்தியையடுத்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் குழப்பமடைந் திருக்கின்றது. தமிழ்ச்செல்வன் மலையகத்துக்கு வருவதை விரும்பாத நிலைப்பாட்டை கொண் டிருக்கும் இ.தொ.கா., இது குறித்து ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடமும் நேரில் பிரஸ்தா பித்திருக்கின்றது. தமிழ்ச்செல்வன் உட்படப் புலிகளின் பிர முகர்கள் மலையகத்துக்கு விஜயம்செய்யலாம் என்று கூறப்படும் செய்திகள் குறித்து அதிக கவன மும், சிரத்தையும் கொள்ளும்படி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நேரில் கேட்டிருக்கிறார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான். ஜே.வி.பி., சிஹல உறுமய ரகத்தில் இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் தமிழ்ச் செல்வன் ஜுரம் ஏற்பட்டுள்ளது. கடந்த திங்களன்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை இ.தொ.கா. பிரமுகர்கள் சந் தித்தபோது இவ்விடயம் தொடர்பாக அவர்கள் ஜனாதிபதியிடம் விவரித்தனர் என நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளன. ஜே.வி.பி. பிரசார செயலாளர் விமல் வீர வன்ஸவும். ஜாதிக யஹல உறுமயவின் பேச் சாளர் வண.அத்துரலியரத்ன தேரரும் தமிழ்ச் செல்வன் மலையகத்திற்கு விஜயம் செய்யப் போகின்றார் எனக் கூறி, நாடாளுமன்றில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியிருந்தனர் என்பது தெரிந்ததே. இவர்கள் இருவருமே இனவாதப் பத்திரிகை ஒன்றில் வெளியான ஆதாரமற்ற செய்தி ஒன்றை தூக்கிப் பிடித்துக்கொண்டே நாடாளுமன்றத் தில் துள்ளிக்குதித்தனர். மலையக மக்கள் முன்னணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பெ.சந்திர சேகரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசி யல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை மலையகத்திற்கு வரும்படி அழைப்பு விடுத் துள்ளார். இந்த அழைப்பை ஏற்று, ஓர் ஆயுதப் போராட்டக் குழுவின் பிரதிநிதி தென்பகுதிக்கு வந்தால், இப்பிரதேசத்தின் பாதுகாப்பிற்கு குந்த கம் ஏற்படும் என்று அவர்கள் இருவரும் நாடா ளுமன்றத்தில் ஆரவாரம் பண்ணினர். ஆனால், சபையில் இருந்த பிரதமரோ அல் லது சிரேஷ்ட அமைச்சர்களோ இந்தக் கருத் துக்களைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்து அலட் டிக்கொள்ளவில்லை. இது ஆதாரமற்ற ஒரு தக வலின் அடிப்படையில் பேசிய பேச்சு என்று கருதி அவர்கள் அதனை உதாசீனப்படுத்தியி ருந்தனர். ஆனால், இ.தொ.காவும் இப்போது அந்தப் பிரச்சினையைத் தூக்கிப் பிடித்திருக்கின்றது எனத் தெரியவருகின்றது. அமைச்சர் பதவிகளை ராஜினாமாச் செய்து அரசியலிருந்து வெளியேறுகிறோம் எனத் துள் ளிக் குதித்த இ.தொ.கா., பின்னர் ஜனாதிபதியி டம் சரணாகதி அடைந்தது தெரிந்ததே. கடந்த திங்களன்று ஜனாதிபதியைச் சந்தித்து சமாதானம் செய்யச் சென்ற இ.தொ.காவினர் தமிழ்ச்செல்வன் விவகாரம் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் பிரஸ்தாபித்தனராம். மலையகத்திற்குத் தமிழ்ச்செல்வனை வர வழைக்கத் திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி அடி படுகின்றது. நாடாளுமன்றத்திலும் இவ்விட யம் தொடர்பாக பிரச்சினை எழுப்பப்பட்டது என்ற விடயத்தை இ.தொ.காவினர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர். தாங்களும் இவ்விடயத்தில் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் என்பதை சூசகமாக ஜனா திபதியிடம் தெரிவித்தனர் இ.தொ.காவினர் எனக் கூறப்பட்டது. இ.தொ.காவினரின் கூற்றை ஜனாதிபதி மிகவும் அவதானமாகக் கேட்டுக்கொண்டிருந்த போதும் அதைப்பற்றி எந்தவிதமான கருத் தையோ, பதிலையோ அவர் கூறவில்லையாம். நாடாளுமன்றத்திலேயே கிளப்பப்பட்ட விட யம் ஏற்கனவே ஜனாதிபதிக்குத் தெரிந்தது தானே. இவர்கள் செல்லும்வரை அவர் இது தெரியா மலா இருந்தார் என ஜனாதிபதியிடம் நெருங் கிய வட்டாரங்கள் கேள்வியயழுப்பின. uthayan - shiyam - 03-03-2005 மலையக தமிழர்களும் விழித்துகொண்டால் உவையின்ரை பிழைப்பிலையல்லோ மண்விழும் அதுதான் :evil: :evil: - cannon - 03-03-2005 இன்றைய இ.தொ.காவின் தொண்டமான், அன்றைய தொண்டமானின் பெயரில் வலம்வரும், மலையக மக்களின் வாழ்வு, பொருளாதாரம், வளர்ச்சிஎன்பவற்றில் கரிசனையற்ற முன்னால் கேடி! ரணிலின் அரசிலிருந்தபோது இவர் செய்த தில்லுமுள்ளுக்கள், ஊழல்கள், ஓர் இந்திய பெண் ஊடகவியலாளருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, இவரது அமைச்சின் கீழுள்ள பல ஒப்பந்தங்களை இந்திய நிறுவனங்களுக்கு கூடிய நிதியளித்து செய்ய முற்பட்டத்ல்லாம் சந்திரிக்கா அம்மையாரிடம் ஆவனங்களுடன் மாட்டியபடியால், இன்று சந்திரிக்கா அம்மையாரின் காலை விடாது நக்கிக் கிடக்கும் ஓர் நாயாக மாறிவிட்டார்! இவர் தமிழ்செல்வனின் மலையக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன் ஒருதரம் யோசிக்க வேண்டாமா: யுத்த நிறுத்தம் கையெழுத்திட்டதன் பின் தான் சார்ந்த கும்பல் வன்னி சென்று தலைவர் பிரபாகரனைச் சந்தித்ததை! ஏன் அப்போது வன்னி சென்றாய்? இப்போது உனது இந்திய எசமானர்களைத் திருப்திப் படுத்துவதற்காகவா இந்த நாடகம்? இல்லை, சரிந்து போயிருக்கும் உன் செல்வாக்கு மேலும் பாதிக்கப்படுமென்றா? |