Yarl Forum
யாராவது உதவுங்களேன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: யாராவது உதவுங்களேன் (/showthread.php?tid=4910)



யாராவது உதவுங்களேன் - வியாசன் - 03-03-2005

இரு தினங்களாக என்னால் பாமுனி எழுத்துருவால் எழுதமுடியவில்லை.
நான் கீமென் ல் பாமுனி எழுத்துருவை இணைத்து எழுதிவந்தேன் தற்போது பாமுனி எழுத்துருவுக்கு மாறுகிறது அனால் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் வருகிறது யாராவது உதவுங்களேன்.


- shobana - 03-03-2005

எனக்கு தெரியவில்லை நீங்கள் மதன் அண்ணாவிடம் கேளுங்கோ


- shanmuhi - 03-03-2005

என் நீங்கள் பாமினியிலே எழுதலாம் தானே... ?


- Mathan - 03-03-2005

நானும் கீமான் தான் உபயோகிக்கின்றேன். அதில் ஆங்கிலமூலம் எழுத யூனிக்கோட் தமிழில் வருகின்றது. நீங்கள் பாமினியில் எழுத யூனிக்கோட் தமிழில் வரும் முறையை உபயோகிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். கீமானில் பாமினி2யூனிகோட்டை தெரிவு செய்தவுடன் Taskbar ல் இருக்கும் கீமானின் குறியீடு மஞ்சள் நிறத்திற்கு மாறுகின்றதா?


- tamilini - 03-03-2005

www.jaffnalibrary.com/tools இங்கு உள்ள keyman இணைப்பு வேலை செய்யவில்லை.. காரணம் தெரியவில்லைய.. ஏன். நான் இப்ப தமிழாவில இருந்து இறக்கித்தான் பாவிக்கிறேன். அது தீடீரென வேலை செய்யாமல் விட்டுவிட்டது அப்பு கூட சொன்னார் தனக்கும் வேலை செய்யவில்லை என்று அப்படி ஏதாவது பிரச்சனையோ தெரியவில்லை.. வியாசன் அண்ணா எதுக்கும் இதை முயன்று பாருங்கள்
www.thamizha.com <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வியாசன் - 03-03-2005

நான் கீமான் மென்பொருளை அகற்றிவிட்டு புதிதாக பதிவுசெய்தேன். இப்போது மற்றைய இடங்களில் தமிழில் எழுதக்கூடியதாக உள்ளது. களத்தில் மட்டும் எழுதமுடியவில்லை. நான் சிலவேளை ஏதாவது மென்பொருள் உடைப்பான் பாவித்திருக்கலாம். அல்லது மென்பொருளை அகற்றி இருக்கலாம். அதன் பிறகு இயங்கவில்லை என நம்புகிறேன் யாராவது நம் நிபுணர்கள் ஏதாவது சொல்லவார்கள் பார்ப்போம்
நன்றிகள் அனைவருக்கும்


- kavithan - 03-04-2005

வணக்கம் வியாசன் அண்ணா ஸ்பைவெயார் பாவித்து நீங்கள் உங்கள் கணனியில் பரிசோதித்து அழித்திருந்தீர்களானால் அது உங்கள் கணனியில் உள்ள ஏ-கலப்பையில் கொஞ்ச பைல்களை அழித்துவிடும். அதன் பின் அது தமிழில் எழுதாது. எனவே ஸ்பைவெயார் போட்டு அழிக்கும் போது கீமான் பைல்களை தவர்த்தி அழிக்க முயற்சிக்கவும்,. இவ்வாறு எனக்கு முன்னர் நடந்தது . அதானால் தான் கூறுகிறேன். ஆனால் எந்த ஸ்பைவெயார்... எப்படி அழிப்பது என்பது எல்லாம் மறந்துவிட்டேன்.