Yarl Forum
வலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வலி (/showthread.php?tid=491)



வலி - Paranee - 03-20-2006

வயிற்றுப் பசியை
வாலிபப் பசி வென்றது
கையில் குழந்தையுடன்
இன்னொரு ஏழ்மை சமுதாயம்


- Niththila - 03-20-2006

பரணி அண்ணா கன நாளைக்கு பிறகு நல்லதொரு சிறு கவிதையுடன் வந்திருக்கிறீங்க

நீங்களும் அண்ணியும் நலம் தானே

யாழில இணைய முன்பிருந்தே உங்கட கவிதை பக்கங்களை தேடி வாசிப்பன் இப்ப எல்லாம் நீங்க எழுதுறதை குறைச்சிட்டீங்க போல தொடர்ந்து எழுதுங்க அண்ணா


- Sujeenthan - 03-21-2006

கவிதை நன்றாக இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.


- sagevan - 03-21-2006

நன்றாக உள்ளது.அப்படி ஒரு சமுதாயம் இல்லாமல் போகும் நாள் வெகு விரைவில் வரும்.