Yarl Forum
விமான நிலையத்திலிருந்த நிவாரணப்பொருட்கள் மாயம்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: விமான நிலையத்திலிருந்த நிவாரணப்பொருட்கள் மாயம்! (/showthread.php?tid=4909)



விமான நிலையத்திலிருந்த நிவாரணப்பொருட்கள் மாயம்! - Vaanampaadi - 03-03-2005

விமான நிலையத்திலிருந்த நிவாரணப்பொருட்கள் மாயம்!
அருணன் வியாழக்கிழமை 03 மார்ச் 2005 14:40 ஈழம்
ஆழிப்போரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென மலேசியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப்பொருட்களில் அரைவாசி;த்தொகுதியை காணவில்லை என்று அமெரிக்காவைச்சேர்ந்த தொண்டு அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

கடந்த ஜனவரி 17 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட இந்த நிவாரணப்பொருட்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டதாகவும் அவற்றில் சுமார் 58 வீதமான பொருட்களை காணவில்லை என்றும் அந்த தொண்டு அமைப்பு சிறீலங்காவின் நலன்புரி அமைச்சிடம் முறையிட்டுள்ளது.

நிவாரணப்பொருட்களை அகற்றுவதாகக்கூறிய உதவி அமைப்பினர் அதனை அகற்றிச் சென்றுவிட்டார்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுவிடயத்தில் தெளிவில்லாததால் மேற்குறிப்பிட்ட தொண்டர் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

Puthinam