![]() |
|
15 வயது மாணவிக்கு உரிமை கிடைத்தது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: 15 வயது மாணவிக்கு உரிமை கிடைத்தது (/showthread.php?tid=4908) |
15 வயது மாணவிக்கு உரிமை கிடைத்தது - Vaanampaadi - 03-03-2005 இங்கிலாந்தில் இஸ்லாமிய உடை அணிய உரிமை 15 வயது மாணவிக்கு கிடைத்தது லண்டன், மார்ச் 3- இங்கிலாந்தில் லண்டன் அருகே உள்ள லூடன் நகரைச் சேர்ந்த வர் ஷபீனா பேகம். இவர் முதலில் சல்வார் கமிஸ் அணிந்து பள்ளிக் கூடம் சென்று வந்தார். அதற்கு பள்ளிக்கூட விதிமுறை அனு மதித்தது. 2002-ம் ஆண்டு முகம் கைகள் தவிர அனைத்து உடற் பகுதிகளையும், மறைக்கும்படி யான ஜில்பாப் என்ற இஸ்லாமிய உடையை அணிந்து வந்தபோது, பள்ளிக்கூட நிர்வாகம் அவருக்கு அனுமதி அளிக்க மறுத்து விட் டது. வீட்டுக்குப் போய் உடையை மாற்றிக் கொண்டு வரும்படி நிர்பந்தித்தது. இதை எதிர்த்து பேகம் கோர்ட் டில் வழக்குத் தொடர்ந்தார். கீழ்க் கோர்ட்டில் அவருக்கு தோல் வியே கிடைத்தது. இதை எதிர்த்து அப்பீல் செய்தார். மேல் கோர்ட் டில் அவருக்கு வெற்றி கிடைத் தது. தனி நபர் உரிமையைத் தடுக்கவும், மத சுதந்திரத்தை முடக்கவும் பள்ளிக்கூட நிர் வாகத்துக்கு உரிமை இல்லை என்று கோர்ட்டு கூறியது. Dailythanthi - MEERA - 03-04-2005 ஆனால் இந்த விடயம் பாதகமாக கூட அமையலாம் எதிர்காலத்தில்....! - Mathan - 03-04-2005 இது தனிநபர் உரிமைதான், ஆனால் நாளை இதே போல் ஒவ்வொரு சமூகமும் தமக்குரிய உடைகள் நம்பிக்கைகளை பாடசாலைக்குள் கொண்டு வந்தார்கள் என்றால் அந்த இளம் மனதிலேயே வேறுபாடுகள் விதைக்கப்பட்டுவிடும், இதனால் பாடசாலை சீருடைக்கே ஒரு முடிவுகாலம் வரப்போகின்றதோ தெரியவில்லை என்று இன்றைய உள்ளூர் பத்திரிகைகளில் எழுதியிருந்தார்கள், - shiyam - 03-04-2005 பிரான்ஸ் நாட்டில் சீருடைகள் இல்லை யாரும் எப்படியும் உடுப்பு அணியலாம் சில நேரம் எனக்கு சந்தேகமாக இருக்கும் பாடசாலை போகிறார்களா அல்லது இரவு விடுதிக்கு போகிறார்களா??என்று ஆனாலும் இங்கு சட்டப்படி யாரும் எந்த மதத்தையும் அடையாளப்படுத்தும் சின்னமோ உடையோ அணியகூடாது பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி இஸ்லாம் மாணவிகளின் எதிர்ப்பால் இழுபறியில் கிடக்கிறது.பெண்ணுரிமை பற்றி வாய்கிழிய பேசும் பெண்கள் கொஞ்சம் கவனித்தால் நல்லது 8) - Mathan - 03-04-2005 பள்ளி மாணாக்கருக்கு சீருடை இருந்தால் அது பாடசாலையில் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தாது, ஒரு அவசியமான விசயமும் கூட, இந்த வழக்கின் முடிவினை தொடந்து சீருடைகளும் அழிந்து போகாமல் இருந்தால் சரிதான், - shiyam - 03-05-2005 இஸ்லாமிய மாணவியர் வாசனைத்திரவியம் பூசலாகாது ! பாடசாலைகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வரவேண்டும். அவர்கள் உடலில் வாசனைத்திரவியங்களை பூசுதல் கூடாது என்னும் போதனைகள் அடங்கிய ஒலிநாடா ஒன்று டென்மார்க் இஸ்லாமிய பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இப்போது தலைநகரில் உள்ள அரபு இஸ்லாமிய பாடசாலை அதிபர் மேற்படி ஒலி நாடாவின் உள்ளடக்கத்திற்கும் பாடசாலைக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளார். நன்றி அலைகள் தளம் |