![]() |
|
மொரீஷியஸ் தமிழர்களின் வீரப் போராட்டம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: மொரீஷியஸ் தமிழர்களின் வீரப் போராட்டம்! (/showthread.php?tid=4906) |
மொரீஷியஸ் தமிழர்களின் வீரப் போராட்டம்! - Vaanampaadi - 03-03-2005 மொரீஷியஸ் தமிழர்களின் வீரப் போராட்டம்! <img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/mauri250.jpg' border='0' alt='user posted image'> <img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/mauritiusmoney250.jpg' border='0' alt='user posted image'> கே. சொர்ணம் அண்மையில் வெளிவந்துள்ள ஏழு புதிய பணத்தாள்களில் தமிழுக்குரிய இடம் மாற்றப்பட்டுள்ளதையொட்டி மொரீஷியசில் வரலாறு காணாத தமிழர் பேரணிகள் மிகவும் வியக்கத்தக்கதாய் நடைபெற்றன. 2004 அக்டோபர் 30ம் நாள் வெள்ளிக்கிழமை மாலையில், மொரீஷயஸ் மத்திய வங்கி ஆளுநரால் ஏழு புதிய பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. இந் நிகழ்ச்சியில் அந்நாட்டுத் தலைமை அமைச்சரும் (பிரதமர்), நிதி அமைச்சரும் மற்றும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். ஈராயிரம், ஆயிரம், ஐந்நூறு, இரு நூறு, நூறு, ஐம்பது, இருபத்தைந்து ரூபாய் மதிப்புத் தாள்களில் முறையே சிவசாகர், இராம்கூலம், காய்தான் டூவால், விஷ்ணுதயாளு, அகமது, அரங்கநாதன் சீனிவாசன், பாட்சுரோ, ஆச்சூவான் ஆகிய அமரரான அரசியல்வாதிகளின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து பணத்தாள்களில் ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழி இரண்டாவது இடத்தை வகித்து வந்தது. தமிழர்களுடைய குடியேற்றம், பணி, ஒத்துழைப்பு முதலியவற்றைக் கருதியே இவ்வாறு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்தார்கள். ஆனால் அண்மையில் தமிழ் மொழி மூன்றாவது இடத்திற்குக் கொண்டு வரப்பட்டதைக் கண்டு தமிழ் மக்கள் பொறுத்துக் கொள்ளாது, ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். இது தமிழுக்குத் தீங்கு எனக் கருதிப் பல தமிழ்க் குழுக்கள் ஒன்று சேர்ந்து பேரணிகள், கண்டனக் கூட்டங்கள் செய்து வந்தார்கள். இந்தப் புதிய தாளில் இரண்டாவது இடத்தில் இந்தி மொழி விளங்குகிறது. தமிழோ, மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. உடனடியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஒட்டி மீனாட்சியம்மன் திருக்கோவில் பிரகாரத்தில் முக்கிய கூட்டம் கூடியது. நவம்பர் 8ஆம் நாளில் மோக்காவில் நடைபெற்ற முதல் கண்டனக் கூட்டத்தில் ஏறக்குறைய எண்ணாயிரம் பேர் கலந்து கொண்டனர். மொரீசியசு தமிழ்க் கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் சிதம்பரம் (பிள்ளை) வரவேற்புரை ஆற்றினார். நாடாளுமன்ற உறுப்பினரான இரு தமிழ் அமைச்சர்களும் எதிர்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும் கலந்து கொண்டனர். பேரணி மோக்காவை விட்டு பிளாஸா அரங்கின் பிரகாரத்தில் தமிழர் குடியேற்றத்தின் முக்கிய சின்னமாகிய "சிலம்பு' என்ற வரலாற்றுக் கற்சிலைக்குச் சென்றது. மத்திய வங்கியின் ஆளுனர் தான்மாராயின் உருவத்தைக் கொளுத்தினார்கள். அங்கு, நம் முன்னோருக்கு அஞ்சலி செலுத்திக், குழுத்தலைவர்கள் உரையாற்றினார்கள். இரண்டாவது பேரணி பதின்மூன்றாம் நாளன்று "தமிழ் மனசாட்சி' என்ற குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் தலைநகரத்தில் நடத்தினார்கள். நாட்டுப் பெண்மணி தியாகி அஞ்சலை குப்பன் சிலைக்கு மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்கள். இந்தப் பேரணியில் பிற குழுக்களின் தலைவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். மத்திய வங்கியின் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் "தமிழ்க் கழகம்' சார்பில், ரோசில் நகரத்தில் நடத்திய பெருங் கூட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்து ஆண்களும், பெண்களும் கையில் மஞ்சள் கொடி ஏந்தி வந்தனர். பணத்தாளில் ஏற்பட்ட மாற்றத்தைப் பெதும் கண்டித்தனர். அங்கும் எல்லா முக்கியமான குழுக்களின் தலைவர்கள் பேசினார்கள். அரசுக்கு எச்சக்கை விடப்பட்டுள்ளது. சட்டம் மூலமாகப் போராட்டம் தொடரும் என்றனர். தமிழர்கள் இந்து என்ற பொதுக் குழுவிலிருந்து விலக வேண்டும். அரசு எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார்கள். தமிழர்ச்சகப் பெருமக்கள் பத்து பேர் குடியரசு தலைவரைச் சந்திக்க விரைந்தனர். துணைக் குடியரசு தலைவரையும் பலர் அணுகி முறையிட்டார்கள். இந்த நிகழ்ச்சியால் தலைமை அமைச்சர் இராம்குலாம் கலங்கினார். நடவடிக்கை எடுக்க முற்பட்டார். புதிய பணத்தாள்களை மறுபடியும் அச்சடிக்குமாறு வங்கி ஆளுநருக்குக் கட்டளையிட்டார். வியாழன் 19ஆம் நாள் புதிய தாள்கள் பழைய முறைப்படி (அதாவது தமிழ் இரண்டாவது இடத்தில் வைத்து) அச்சடிக்குமாறு கட்டளையிட்டார். அடுத்த ஆண்டு சூலை மாதத்துக்குள் இந்தப் பணி முடிக்க வேண்டும் என்று கூறினார் தலைமை அமைச்சர். இந்தத் தமிழர் வெற்றி மாபெரும் வெற்றியாகும். சிறுபான்மைத் தமிழர் செய்த முயற்சியால் நாடே கலங்கியது. என்னே நம் இளைஞர் சாதனை!. தமிழன்னையின் மனம் குளிர இந்த நிகழ்ச்சி தமிழர்களிடையே ஒற்றுமை தோற்றுவித்தது மிகவும் போற்றக் கூடியது. தென் செய்தி - hari - 03-03-2005 இந்த ஒற்றுமை உலகவாழ் அனைத்து தமிழர்களிடம் இருக்கவேண்டும்! - hari - 03-03-2005 <img src='http://www.southtravels.com/africa/mauritius/gifs/map.jpg' border='0' alt='user posted image'> - cannon - 03-03-2005 இது போன்று முன்பும் இதே பிரட்சனைக்கு போராட்டம் மொறீஸியஸ்ஸீல் நடந்து இருக்கிறது! ஆனால் இப்போராட்டங்கள் அங்கு நடாத்தி பிரயோசனமென்ன? அங்குள்ள தமிழர்கள் தமிழ் பேசத்தெரியாதவர்கள், அடையாளத்தை தொலைத்து விட்டவர்கள்! பின்பு ஏன் போராட்டம்? - shiyam - 03-03-2005 அடையாளங்களை தொலைத்தவர்களானாலும் ஈழப்போராட்டம்தான் அங்குள்ளதமிழர்கழையும் பாதித்தது எனக்கு இங்குபல மொறிசியஸ் நண்பர்கள் இருக்கிறார்கள் தமிழ் கதைக்க தெரியாது பிரெஞ்சுமட்டும்தான் கதைப்பார்கள் என்னுடன் பழக்கமானபிறகு சொன்னார்கள் தமிழர்களிற்கு இவ்வளவு பெரியசக்தியும் வீரமும் இருக்கிறதென்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் ஆனாலும் தமிழ் கதைக்கதெரியாததையிட்டு வெட்கபடுகிறோம் என்று ஆனாலும் இப்போது தங்கள் அடையாளத்தை தேட முனைகிறார்கள் அவர்களிற்கு உதவுவோம் அவர்களிற்கும் அன்று ஒரு தன்மான தலைவன் கிடைத்திருந்தால் அவர்கள் அடையாளம் தொலைந்து போகாதிருந்திருக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- cannon - 03-03-2005 மொறீஸியஸ்ஸில் ஆங்கிலம், பிரஞ்சு ஆகியன கட்டாய மொழிகளாக்கப்பட்டிருக்கின்றன. ஏன் அங்குள்ள தமிழர்கள் என்று கூறுவோர் தமிழை கட்டாய மொழியாக படிப்பித்தல் வேண்டுமென போராட்டங்கள் நடாத்தவில்லை? இல்லை தமிழை அங்கு வளர்ப்பதற்கு ஏதாவது முயற்சிகள் எடுத்தார்களா? போராட்டங்கள் நடாத்தினார்களா? பதில் - இல்லை! மாறாக தமிழை ஒரு குறியீட்டுப் பொருளாக வைத்திருக்கப் போராட்டம். இன்னும் எவ்வளவு காலத்திற்கு "தமிழ்" என்ற சொல்லாவது அங்கு நிலைத்திருக்கப் போகுது? - MEERA - 03-04-2005 இந்த விடயத்தில் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளார்கள். வரவேற்கத்தக்கது..... - Mathuran - 03-04-2005 shiyam Wrote:அடையாளங்களை தொலைத்தவர்களானாலும் ஈழப்போராட்டம்தான் அங்குள்ளதமிழர்கழையும் பாதித்தது எனக்கு இங்குபல மொறிசியஸ் நண்பர்கள் இருக்கிறார்கள் தமிழ் கதைக்க தெரியாது பிரெஞ்சுமட்டும்தான் கதைப்பார்கள் என்னுடன் பழக்கமானபிறகு சொன்னார்கள் தமிழர்களிற்கு இவ்வளவு பெரியசக்தியும் வீரமும் இருக்கிறதென்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் ஆனாலும் தமிழ் கதைக்கதெரியாததையிட்டு வெட்கபடுகிறோம் என்று ஆனாலும் இப்போது தங்கள் அடையாளத்தை தேட முனைகிறார்கள் அவர்களிற்கு உதவுவோம் அவர்களிற்கும் அன்று ஒரு தன்மான தலைவன் கிடைத்திருந்தால் அவர்கள் அடையாளம் தொலைந்து போகாதிருந்திருக்கும் <!--emo&
|