Yarl Forum
கணினி அறிவியல் பட்டம் பெற்ற முருகன், நளினி மற்றும் பேரறிவாளன - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கணினி அறிவியல் பட்டம் பெற்ற முருகன், நளினி மற்றும் பேரறிவாளன (/showthread.php?tid=488)



கணினி அறிவியல் பட்டம் பெற்ற முருகன், நளினி மற்றும் பேரறிவாளன - தமிழரசன் - 03-20-2006

கணினி அறிவியல் பட்டம் பெற்ற ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் முருகன், நளினி மற்றும் பேரறிவாளன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய இருவரும் சிறையிலிருந்தபடியே பி.சி.ஏ. பட்டப்படிப்பை முடித்துள்ளனர். முருகனின் மனைவி நளினி எம்.சி.ஏ. பட்டப்படிப்பை நிறைவு செய்யவுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன் ஆகிய இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த மூவரும் இந்திரா காந்தி திறந்த நிலை தேசிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணினி அறிவியல் படிப்பை படித்து வந்தனர்.

முருகனும், பேரறிவாளனும் பி.சி.ஏ. படிப்பை முடித்து விட்டனர். அடுத்து எம்.சி.ஏ. படிக்கவுள்ளனர். அதேபோல, நளினியும் எம்.சி.ஏ. படிப்பை நிறைவு செய்யும் நிலையில் உள்ளார். சிறைக்குள் நடத்தப்படும் வகுப்புகளில் சேர்ந்து இவர்கள் இந்தப் பட்டப்படிப்பை முடித்துள்ளனர்.