Yarl Forum
தமிழர் 15ஆவது இடம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: தமிழர் 15ஆவது இடம் (/showthread.php?tid=4860)



தமிழர் 15ஆவது இடம் - Vaanampaadi - 03-07-2005

ஆஸ்திரேலிய கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் நாராயண் கார்த்திக் 15ஆவது இடம்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/03/20050306041834karthikeyan1.jpg' border='0' alt='user posted image'>

நாராயண் கார்த்திகேயன்
அதிவேக போர்முலா 1 கார் ஓட்ட விளையாட்டில் அவுஸ்திரேலிய 'கிராண்ட் ப்ரீ' பந்தயத்தில் கலந்து கொண்ட முதலாவது இந்திய வீரர் நாராயண் கார்த்திகேயன் 15வது இடத்தை பெற்றுள்ளார்.

இந்த கார் ஓட்டப் பந்தயத்தின் முதலாவது போட்டியில், இந்த 27 வயது இளைஞர், 57 தடவைகள் ஓடுபாதையில் சுற்றி வந்ததை இந்தியாவெங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் கண்டுகளித்தனர்.

போர்முலா 1 ஓட்டப்பந்தயத்துக்கான ஒரு ஓடு பாதையைக் கூட கொண்டிருக்காத ஒரு நாட்டில் இருந்து, இந்த இளைஞர் இவ்வளவு உச்சத்தை எட்டியிருப்பது மிகவும் அசாதாரணமான விசயம் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவுக்கு இந்த கார் ஓட்டப்போட்டி மிகவும் புதியது என்ற போதிலும், கார்த்திக் தற்போது உலக மட்டத்திலான இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளமை அங்கு இனிமேல் கார் ஓட்டப்பந்தயங்களுக்கும் பெரும் வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

BBC Thamiloosai