Yarl Forum
பெண்ணுக்கு தண்டனை கிடைக்குமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பெண்ணுக்கு தண்டனை கிடைக்குமா? (/showthread.php?tid=4858)



பெண்ணுக்கு தண்டனை கிடைக்குமா? - Vaanampaadi - 03-07-2005

வேலைவாய்ப்பு பெறுவதற்காக
போலி திருமணங்கள் நடத்திய இந்திய பெண்ணுக்கு தண்டனை கிடைக்குமா?
25_ந் தேதி தீர்ப்பு


லண்டன், மார்ச். 6_

வேலைவாய்ப்பு பெறுவதற் காக லண்டனில் போலி திருமணங்கள் நடத்தி பிடி பட்ட இந்திய பெண்ணுக்கு தண்டனை கிடைக்குமா? என்பது 25_ந் தேதி தெரிய வரும்.

போலி திருமணங்கள்

இங்கிலாந்தில் குடியேறி, வேலைவாய்ப்பு பெறுவதற்காக போலி திருமணம் செய்து கொண்டு பலர் நுழைவது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தடுக்க லண்டன் சமூக குற்றத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த போலீசாரின் பிடியில் கடந்த ஆண்டு ஒரு இந்திய தம்பதி சிக்கினர். பிடிபட்டவர் பெயர் தர்ஷன்கில், மனைவி பெயர் ஜஸ்விந்தர்கில். இந்தியா வில் இருந்து லண்டன் செல்லும் ஆண்களுக்கு அங்குள்ள பெண்களை போலி திருமணம் செய்ய இவர்கள் ஏற்பாடு செய் தனர்.

இந்த போலி திருமண நாடகத் துக்கு முன்வரும் பெண்களுக்கு ரூ.83 ஆயிரம் வழங்கினர். இங்கிலாந்திலும், இந்தியாவிலும் இந்த போலி திருமணங்கள் நடந்தேறின. மேலும் அந்த பெண் களுக்கு `மாடலிங்' வேலை வாய்ப்பு தருவதாகவும் ஏமாற்றி இருக்கிறார்கள்.

தண்டனை கிடைக்குமா?

இதன்பேரில் கணவன்_ மனைவி இருவரும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்கள். இவர் களுக்கு உதவி புரிந்ததாக பசில் ரசீது, ஆகாஷ்கன்னா அகமது சபீர் ஆகியோரும் பிடிபட்டுள் ளார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள் ளனர். இந்த வழக்கில் வருகிற 25_ந் தேதி தீர்ப்பு வழங்கப் படுகிறது. அப்போது இந்திய பெண் உள்பட 5 பேருக்கும் தண்டனை கிடைக்குமா? என்பது தெரிய வரும்.


அந்த "666" எண்களால் ஒரு உயிர் பலி - Vaanampaadi - 03-07-2005

கடவுளுக்கு எதிரானவன் என நினைத்து மகனைகொன்ற தந்தைக்கு ஜெயில்

பாட்பிலியான், மார்ச். 6-

அமெரிக்காவின் பாட்பிலியான் பகுதியை சேர்ந்தவர் இவான் ஹெங்க். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி ஒரு ஆண் குழந்தை பெற்றார். பிரிண்டன் கான்சாலிஸ் என்று பெயரிட்ட அந்த குழந்தையின் நெற்றியில் 666 என்று எழுத்துக்கள் தெரிந்தன.

இப்படி 666 என்ற எழுத்துடன் பிறக்கும் குழந்தை கடவுளுக்கு எதிரானவன் என்று அதன் தந்தை இவான் ஹெங்க் கருதினார். அந்த குழந்தையை கொன்று விடுவதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தார்.

கடந்த 2003-ம் ஆண்டு ஹெங்க் தனது மகனை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்று அங்கு அவனை வெட்டிக் கொன்றார். அப்போது பிரிண்டன் கான்சாலிசுக்கு வயது 4.

குழந்தை கொல்லப்பட்டது குடும்பத்துக்கு தெரியாது அவனது உறவினர்கள் 2 மாதமாக தேடினார்கள்.
இந்த நிலையில் அந்த குழந்தையின் தாய் நடத்தி வந்த பட்டறையில் ரத்த கறைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஹெங்க் மகனை கொன்றது குறித்து தனது மனைவியிடம் தெரிவித்து விட்டார்.

இதையொட்டி போலீசார் ஹெங்கை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அமெரிக்கா முழுவதும் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடவுளுக்கு எதிரானவன் என்பதால் மகனை கொன்றதாக ஹெங்க் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இந்த வழக்கில் இப்போது கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. ஹெங்குக்கு ஆயுள் தண்டனை வித்தித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அவரை பரோலில் கூட வெளியே விடக்கூடாது என்றும் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.