![]() |
|
சினிமாவில் நடிக்க ஆசையா? தொடர்பு கொள்ளவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சினிமாவில் நடிக்க ஆசையா? தொடர்பு கொள்ளவும் (/showthread.php?tid=4855) |
சினிமாவில் நடிக்க ஆசையா? தொடர்பு கொள்ளவும் - Vaanampaadi - 03-07-2005 சினிமாவில் நடிக்க ஆசையா? அப்படியானால் மேற்கொண்டு படியுங்கள் ஜெ.ஜெ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் திரைப்படம் "சென்னாபுரி காளிகாம்பாள்". இந்த படத்தில் கதாநாயகனாக திரைப்பட இசையமைப்பாளர் தேவாவின் தம்பி மகன் ஜெய் நடிக்கிறார். இசை: தேவா இயக்கம்-ராஜா மகேஷ். பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள இப்படத்தில் சுவாரசியமான பல விஷயங்கள் சேர்க்கப்பட்டு, மனதைக் கவரும் பாடல்களுடன் வெளி வரவுள்ளது. இந்தியா, மலேசியா,சிங்கப்பூர்,லண்டன் ஆகிய நாடுகளில் படமாக்கப்படுகிறது. சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக பிரபலமாக நடைபெற்றுவரும் விசுவின் "அரட்டை அரங்கம்" நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான செல்வக்குமார், இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா அண்மையில் இந்தியாவில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய துணைத்தூதர் ரோஸ்லின் இஸ்மாயில்,முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு, தயாரிப்பாளர் அழகப்பன், இசையமைப்பாளர் தேவா போன்றோர் கலந்து கொண்டனர். மிக அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் நடிக்க, நடிகர்-நடிகைகள், துணைநடிகர்-நடிகைகள், நடனமணிகள் தேவைப் படுகின்றனர். எனவே திரைப்படத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்கள் 016-9085341 தொடர்பு கொள்ளலாம். தங்களது புகைப்படம், சுயவிவரக்குறிப்பு(Bio-Data) போன்றவற்றுடன் மேற்குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்:deena@ibosglobal.com நடிக்க ஆசை உள்ளவர்கள் விரைந்து தொடர்பு கொள்ளவும். Vanakkammalaysia |