![]() |
|
ஒரே குரல்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஒரே குரல்... (/showthread.php?tid=4712) |
ஒரே குரல்... - yalie - 03-21-2005 ஒரே குரல்... இடிந்து கிடக்கின்றன மசூதிகள்... இடிபாடுகளின் உள்ளிருந்து எட்டிப்பார்க்கிறான் இறைவன்! எரிந்து கிடக்கின்றன தேவாலயங்கள்... சாம்பல் குவியலில் மெல்ல அசைகிறது கர்த்தரின் தலை! காயம்பட்டு கிடக்கின்றன கோவில்கள்... காதுகளைப் பொத்தியபடி கண்திறந்து பார்க்கிறான் கடவுள்! வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்தை நோக்கி மூவரும் கேட்கிறார்கள் ஒரு கேள்வி... "உங்களில் யாராவது ஒரு மனிதன் இருந்தால் வரச் சொல்லுங்கள் - ஒன்றாக நாங்கள் உயிர்த்தெழுகிறோம்!" - மு. மேத்தா - hari - 03-21-2005 நன்றி யாழி! - KULAKADDAN - 03-21-2005 நன்றி ஆமா.....இங்க ஏன் போட்டிருக்கு..... 8) - yarlmohan - 03-21-2005 Quote:நன்றிகவிதை பகுதிக்கு மாற்றியுள்ளேன் Re: ஒரே குரல்... - eelapirean - 03-21-2005 yalie Wrote::roll: :roll: :roll: |