Yarl Forum
மலரும் நினைவுகள்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மலரும் நினைவுகள்.... (/showthread.php?tid=4711)



மலரும் நினைவுகள்.... - Kurumpan - 03-21-2005

<img src='http://www.eelavision.com/gallery/5002-8232.jpg' border='0' alt='user posted image'>


[size=18]கண்டங்கள் கடந்து வந்து
கண் மூடி உறங்கினாலும்
உறங்காமல் மனசோடு மட்டும்
மலர்ந்த என் மண் நினைவுகள்...

பிஞ்சு விரல்களால்
பற்றி எடுத்த மண்
அன்று விரல்களில் ஒட்டியவை
இன்றும் உயிர் இழைகளிலே...

ஆத்தோர ஆலை
அந்தி சாயும் வேளை
புழுதி மணல்
உச்சி வெயில்
வாத்தியார் பிரம்பு
வயல் வரம்பு

உள்ளம் குளிர்ந்த மழைத்துளிகள்
வெள்ளம் நனைத்த கால்கள்
ஓரப் பார்வை பார்த்த
பக்கத்து வீட்டுப் பெண்ணின்
ஓடி ஒழிந்த சிரிப்பு

களவாடிச் சுவைத்த மாங்காய்
கணப்பொழுதும் யோசிக்கா பொய்கள்

இன்னும்...
எத்தனை எத்தனையோ...
இளமைக்கால நினைவுகள்
இன்றும் பசுமையாக...


- Malalai - 03-21-2005

காலம் தான்
கரைந்து விட்டாலும்
பசுமரத்தாணி போல
பசுமையான நினைவுகள்
தலை நீட்டி
பார்க்கும் அடிக்கடி
அதை மீட்டுப்
பார்ப்பதில் தான்
எத்தனை சுகம்!!

குறும்பன் அண்ணா அழகான கவிதை....
நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்ததற்கு நன்றிகள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 03-21-2005

பூவரசமிலையிலே பீ...பீ...செஞ்சு ஊதினோம்......
பள்ளிகூடம் போற வழியில் பட்டாம்பூச்சி தேடினோம்...
தண்ணிப் பாம்பு வரப்பில் கண்டு தலைதெறிக்க ஓடினோம்..
பனங்காட்டு கூடலில் பசுமாட்டு தொழுவத்தை சுத்திவந்து..
பம்பாய்க்கு போனதென்று கூறினோம்....
அது தான் இளமை....அது தான் இனிமை..............(4 students)

தம்பி தூள்......... நா.முத்துக்குமாரையே மிஞ்சிவிட்டாயடி..நீ


- shanmuhi - 03-21-2005

Quote: இன்னும்...
எத்தனை எத்தனையோ...
இளமைக்கால நினைவுகள்
இன்றும் பசுமையாக...
இளமைக்கால நினைவுகளுடன் மேலும் பல கவிகள் படைத்திட வாழ்த்துக்கள்...


- KULAKADDAN - 03-21-2005

குறும்பன்.....நன்றி...வாழ்த்துக்ள்.........


- aswini2005 - 03-21-2005

குறும்பு ஞாபகங்கள் எல்லா இதயங்களிலும் இந்தவரிகள் சொல்லிய ஞாபகங்கள் அருமையானது.
வாழ்த்துக்கள் குறும்பு தொடர்ந்து எழுதுங்கோ.
Quote:பிஞ்சு விரல்களால்
பற்றி எடுத்த மண்
அன்று விரல்களில் ஒட்டியவை
இன்றும் உயிர் இழைகளிலே...



- yalie - 03-22-2005

குறும்பன் எழுதியது:
பிஞ்சு விரல்களால்
பற்றி எடுத்த மண்
அன்று விரல்களில் ஒட்டியவை
இன்றும் உயிர் இழைகளிலே...
----இன்னும்...
எத்தனை எத்தனையோ...
இளமைக்கால நினைவுகள்
இன்றும் பசுமையாக...


-- இடுப்பில் இழுத்து முடிந்த
வழுக்கி வழுக்கி விழும் காற்சட்டையில்
தட்டிக் கை துடைத்து
உதறிய போது அன்று
எனக்குத் தெரியவில்லை
இந்த மண்ணின் அருமை.
இன்று அன்னிய மண்ணில்
புழுவாய் நெளிகையில்
விரலிடுக்கிலிருந்து விழுந்த மண்
உயிரிழையில் ஒட்டியுள்ளதை
நானும் உணர்கின்றேன்!!
என் மண்ணே உனைப்பிரிந்து
ஆண்டு பல ஆனால் என்ன??
இன்னும் என் நாசிகளில்
அதே புழுதி வாசம்!!
கோவில் திருவிழாவும்
குரும்பையில் நாம் கட்டிய தேரும்
வேலிச் சந்து கடந்து
விளாத்தியில் ஏறியதும்
முருங்கை மரத்தில் குடியிருந்த
மயிர் கொட்டிக்குப் பயந்ததும்
முள்முருக்குப் பூவைப் பார்த்து
வியந்து வாய் பிளந்ததும்
ஆடு குட்டி போட்ட போது
ஆடிப்பாடி மகிழ்ந்ததும்
நாடு விட்டு வந்த போதும்
கூடவே வந்த நினைவுகள்!
நெஞ்சுக் கூட்டுக்குள்
அடிக்கடி வந்து மோதும்
இந்த மலரும் நினைவுகளே
இன்றைய என் இருப்பின்
அத்திவாரம்!!!
இனி எப்போது நானுன்னை
விரலிலெடுத்து விழியில் காண்பேன்
இன்னருமை மண்ணே!!!