Yarl Forum
A9 வீதியில் விபத்து - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: A9 வீதியில் விபத்து (/showthread.php?tid=4680)



A9 வீதியில் விபத்து - Nitharsan - 03-24-2005

A9 வீதியில் விபத்து

ஏ-9 வீதியில் ஏற்ப்பட்ட வீதி விபத்தில் இருவர் கொல்லப்பட்டனர் பலர் படு காயமடைந்தனர் வாகன நடத்துனரும் ஒரு குழந். தையுமே கொல்லப்பட்டவர்களாவர். ஏனையார் படுகாயதடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் புளியங்குளத்தில் நேற்று மாலை 3. மணியளவில் இடம் பெற்றது
மேலதிக விபரங்கள் விரைவில்....


- THAVAM - 03-24-2005

இரானுவஅழிவு - அடுத்து சுனாமி அழிவு - இப்படி தொடரும் வரிசையில் இந்த விபத்தும்.ஏன்தான் எம் இனத்திற்கு......
_____________________________________________________________________
''பனையாலை விழுந்தவனை மாடு ஏறி உழுக்கிற மாதிரி இல்லையோ இந்த செய்தி''
______________________________________________________________________


- Mathan - 03-24-2005

பயணிகள் பேரூந்து புளியங்குளத்திற்கருகே விபத்துக்குள்ளானது

ஓமந்தையிலிருந்து முகமாலை நோக்கி சுமார் 70 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தமிழீழ போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் வண்டி இன்று மாலை புளியங்குளத்திற்கு அருகாமையில் விபத்திற்குள்ளாகி பாலத்தினுள் தலை கீழாக புரண்டதினால் பஸ் நடத்துனர் ஸ்தலத்திலேயே பலியானார்.

காயமடைந்தவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட 15 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கால் நடை ஒன்று வீதியை கடக்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.

புதினம்