![]() |
|
சமாதானம் சாத்தியமில்லை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சமாதானம் சாத்தியமில்லை (/showthread.php?tid=4670) |
சமாதானம் சாத்தியமில்லை - Mathan - 03-26-2005 தற்போதைக்கு சமாதானப் பேச்சுக்களை மீண்டும் துவங்குது சாத்தியமில்லை: கதிர்காமர் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தற்போதைக்கு அமைதிப்பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவங்குவது சாத்தியமில்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கூறியிருக்கிறார். பிரிட்டனுக்கான ஒருவாரகால பயணத்தை மேற்கொண்டு இலங்கை திரும்பிய வெளியுறவுத்துறை அமைச்சர், அண்மையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்துக்கு பிறகான நிவாரண மீள்கட்டுமானப் பணிகளுக்கே தற்சமயம் அரசு முன்னுரிமை தருகிறது என்று அவர் கூறினார். சுனாமி நிவாரணம் மற்றும் மீள்கட்டுமானம் தொடர்பில் அரசு மற்றும் விடுதலைப் புலிகள் இடையில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொதுக் கட்டமைப்பிற்கும் வடக்குக் கிழக்கிற்கான இடைக்கால நிர்வாக சபை குறித்து புலிகள் முன்வைத்துள்ள பிரேரணைகளுக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். சுனாமி மீள்கட்டுமான பொதுக் கட்டமைப்பானது அரசியல் கலப்படம் அற்றது என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழோசை |