Yarl Forum
உளவள வெற்றிமனை திறப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: உளவள வெற்றிமனை திறப்பு (/showthread.php?tid=4622)



உளவள வெற்றிமனை திறப்பு - gururaja - 03-31-2005

அக்கராயன் பிரதேசத்தில் சந்தோசம் உளவள வெற்றிமனை இன்று திறப்பு

அக்கராயன் பிரதேசத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் சந்தோசம் உளவளத்துணை நிலையம் இன்று (30.03.2005) திறக்கப்பட்டது.

போர்ச்;சூழல் காரணமாகவும்ää இயற்கைப் பேரழிவுகள் காரணமாகவும் பின் நகர்ந்த வாழ்வியல் சூழ்நிலைகளுக்குட்பட்டு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கான மற்றுமொரு வெற்றி மனையினை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் கிளிநொச்;சி மாவட்டத்திலுள்ள அக்கராயன் எனும் இடத்தில் திறந்து வைத்துள்ளது.

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்துவரும் ராஜரட்ணம் குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ள இவ்வெற்றிமனைத் திறப்புவிழா நிகழ்வானது திருமுறிகண்டி ஆலய பரிபாலனசபையின் நிர்வாக இணைப்பாளரான சபாரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்துää தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் ஏற்றிவைத்தார்.

இதனையடுத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியினை தமிழர் புனர்வாழ்வுக் கழக உதவி நிறைவேற்றுப்பணிப்பாளர் றீகன் ஏற்றிவைத்தார்.

கட்டடத்தின் பெயர் பலகையினை மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளர் திருக்குமரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

இதனையடுத்து பிரதான விடுதியினை தமிழீழ அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் திறந்துவைத்தார்.

அலுவலகக் கட்டிடத்தினை அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச்; சார்ந்த திருமதி.பரராசிங்கம் சிராணி திறந்துவைத்தார்.

இளைப்பாறு மண்டபத்தினை தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊடகப்பணிப்பாளர் சங்கீதன் திறந்துவைத்தார். தொடர்ந்து சோ.தங்கன்ää கிளிநொச்;சி மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர் கெங்காதரன் முதியோர் இல்லப் பொருளாளர் சாந்தலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சோ.தங்கன் உரையாற்றுகையில்ää தேசியத்தலைவரின் எண்ண வெளிப்பாடாகவே இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டமை பாராட்டப்படவேண்டிய ஒரு விடயமாகும் எனக் குறிப்பிட்டார்.

இன்றைய இத் திறப்புவிழா நிகழ்வில் சிறுவர் நலத் திட்டப்பணிப்பாளர் ரவிää நெக்கோட் திட்ட இணைப்பாளர் சுடர்ää திட்டக்கண்காணிப்பகுதி இணைப்பாளர் வே.பாலசுப்பிரமணியம்ää தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள்ää சந்தோசம் உளவள வெற்றிமனைப் பணியாளர்கள்ää போராளிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

நன்றி தமிழ்நாதம்