Yarl Forum
உன்னை நினைத்து நினைத்து,,,,, - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உன்னை நினைத்து நினைத்து,,,,, (/showthread.php?tid=4551)

Pages: 1 2


உன்னை நினைத்து நினைத்து,,,,, - sunthar - 04-06-2005

பாதி இரவுகளிலும்
பனிப்போர்வையிலும்
உன் நினைவுகள் நெருப்பை மூட்டும்
உன் விழிக்கரங்கள்
என்னுள் புகுந்து
என் நரம்புகளை மீட்டும்

எந்த செடியில் மலர்ந்தாய் நீ
வாடாமல் என்னை வாட்டும்
வித்தை எங்கு கற்றாய்

உன்னாø ஈர்ப்பு விசை
இழந்து தவிக்கிறேன்
உனக்கு பாதைகள் போட
மலர்கள் குவிக்குறேன்

உன்னை நினைத்து நினைத்து
நெஞ்சம் சரிகிறது

என்னுள் நிரம்பியிருக்கும் நீ
என்விழிகள் வழியே
மட்டும் சிந்துகிறாய்
கண்ணீராய் ,,,,,,,,,


- pattusingam - 04-06-2005

கவிதை அருமை
வாழ்த்துக்கள் சுந்தர் தொடர்ந்து எழுதுங்கோ


- sunthar - 04-06-2005

உங்கள் வாழ்த்துக்கு எனது நன்றிகள் பாட்டு சிங்கத்தா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sunthar - 04-06-2005

பாட்டு சிங்கத்தாரே உங்கள் படைப்புகளையும் களத்தில் வைக்கலாமே
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 04-06-2005

Quote:என்னுள் நிரம்பியிருக்கும் நீ
என்விழிகள் வழியே
மட்டும் சிந்துகிறாய்
கண்ணீராய் ,,,,,,,,,

கண்ணீராயும் சிந்தாதேங்கோ.. முகம் வழி அது வழிய... அவள் விம்பம் முகத்தோடு உரச...விம்பமாய் அவள் மெல்லுடல்... வலிக்குமே....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sunthar - 04-06-2005

அது சரி நீங்கள் சொல்லுறதும் சரிதான் அருமையா சொல்லியிருக்கிறியள்


- sunthar - 04-06-2005

உங்கள மாதிரி கவிதை படைக்க யாராலும் முடியாது குருவிகளே
நல்ல கருத்துள்ள கவிதைகளா கொடுததுள்ளீர்கள்
எல்லாவற்றையும் படித்தேன் மிகவும் அருமை அருமை அருமை குருவிகளே


- sunthar - 04-06-2005

நீங்கதான் நீங்கள் நேரம் கிடைக்கும் போது எழுதுவதாக சொல்லிருந்தியள்,அதுக்கே இப்படி எழுதுறியள் எண்டா ,,,,,, Confusedhock:


- sunthar - 04-06-2005

கண்ணதாசனுக்கு அடுத்த கவியரசு நீங்கதான் குருவிகளே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 04-06-2005

sunthar Wrote:கண்ணதாசனுக்கு அடுத்த கவியரசு நீங்கதான் குருவிகளே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

குருவிகள் கிறுக்குதுகளே தவிர கவி வரையல்ல...கவியரசு போல...! ஆனா தனிப்பட்ட முறையில கண்ணதாசனைப் பிடிக்காது...அவரது கவிதைக்கும் சொந்த வாழ்வுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு... அதனால்...! அவருடைய கவிதைகளில் 80% ஊருக்கு உபதேசம் மட்டுமே... தனக்கில்ல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 04-06-2005

ஒரு கோப்பை என் குடியிருப்பு, ஒரு கையில் மதுவும் மறுகையில் மங்கையும் இருக்கும் போது உயிர்துற்கக வேண்டும் என்று சொன்னார் (விரும்பினார்?) கண்ணதாசன்

பணத்திற்காக கவி எழுதுபவர்கள் அதை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது,


- Malalai - 04-06-2005

ஒருவர் தவறு செய்து திருந்தும் போது தான் மற்றவர்கள் அந்த தவறை செய்யாது தவிர்ப்பார்கள்....ஒரு பாடல் வரி ஞாபகத்திற்கு வருகிறது..." தவறுகள் செய்து செய்து திருந்திய பின் தான் நாகரிகம் தோன்றியது" என்று....ஒருவர் செய்த தவறு, மற்றவர்கள் செய்யாது இருக்கக ஒரு தடையாக இருக்கும் :wink: :wink: :wink: :wink:


- Malalai - 04-06-2005

Quote:கண்ணீராயும் சிந்தாதேங்கோ.. முகம் வழி அது வழிய... அவள் விம்பம் முகத்தோடு உரச...விம்பமாய் அவள் மெல்லுடல்... வலிக்குமே....!
அடக்கடவுளே குருவியண்ணா என்ன இது..இப்ப கொஞ்ச நாளாப்பாக்கிறம் உங்கட கவிதை எல்லாம் காதல் பச்சைக்கொடி காட்டுது....
சுந்தர் அண்ணா நல்ல கவிதை..என்ன கண்ணீரின் வழியே அனுப்பிட்டிங்களா வெளிய.... :wink: :wink:


- tamilini - 04-06-2005

Quote:எந்த செடியில் மலர்ந்தாய் நீ
வாடாமல் என்னை வாட்டும்
வித்தை எங்கு கற்றாய்
என்ன சுந்தர வந்த நாளில் இருந்து காதல் கவிதையாய் பொழியுறியள்..?ஃ உங்கள் உள்ளம் களவாடிய அந்த அவள் யார்.. ?? :wink:


- THAVAM - 04-06-2005

தம்பி சுந்தர் கவிதை பிரமாதம் உன்ர கவிதையப்பு என்னை கடந்து வந்த நாளுக்கு கொண்டு சென்று விட்டது உன் கவியால் என் கைகள் கிறுக்கிய சில கீறல்கள்......
கண்ணே! என்
கண்களில் தெரிகிற
குருதிச்சுவடுகள் எல்லாம்
நான் இமைக்காமல்
கண்ணில் வடித்த
கவிதை வரிகள்
______________________________________________________________________
18]''அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.......''[/color]
______________________________________________________________________


- KULAKADDAN - 04-06-2005

நல்லாயிருக்கு சுந்தர்............ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நல்லா அநுபவித்து எழுதுகிறீர்கள் போல............
கற்பகை கிறுக்கலா...........அல்லது அநுபவத்துடனான கற்பனை கிறுக்கலா...................
தொடருங்கள் வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sunthar - 04-06-2005

குருவிகள் கிறுக்குதுகளே தவிர கவி வரையல்ல...கவியரசு போல...! ஆனா தனிப்பட்ட முறையில கண்ணதாசனைப் பிடிக்காது...அவரது கவிதைக்கும் சொந்த வாழ்வுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு... அதனால்...! அவருடைய கவிதைகளில் 80% ஊருக்கு உபதேசம் மட்டுமே... தனக்கில்ல...!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
குருவிகளே நீங்க சொல்லுறதும் சரிதான், அவரது கவிதைக்கும் சொந்த வாழ்வுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டுதான்
அதனால் நீங்கள் கவிஞர் வையிர முத்தையும் மிஞ்சும் அளவுக்கு புகள் பெற எனது வாழ்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sunthar - 04-06-2005

ஒரு கோப்பை என் குடியிருப்பு, ஒரு கையில் மதுவும் மறுகையில் மங்கையும் இருக்கும் போது உயிர்துற்கக வேண்டும் என்று சொன்னார் (விரும்பினார்?) கண்ணதாசன்

பணத்திற்காக கவி எழுதுபவர்கள் அதை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது,
_________________
நீங்கள் சொல்லுறதும் உண்மைதான் மதன் அண் :|


- sunthar - 04-06-2005

மழலை எழுதியது
சுந்தர் அண்ணா நல்ல கவிதை..என்ன கண்ணீரின் வழியே அனுப்பிட்டிங்களா வெளிய....
_________________
கண்ணீரின் வழியே வெளியே சென்றவளை
அவள் நினைவுகள் மீண்டும் உள்ளே அழைக்கிறது மழலை
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sunthar - 04-06-2005

KULAKADDAN உங்கள் வாழ்துக்களுக்கு நன்றிகள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அன்புடன் சுந்தர்