![]() |
|
யா/ உடுத்துறை மகாவித்தியாலத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற இரு ம - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யா/ உடுத்துறை மகாவித்தியாலத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற இரு ம (/showthread.php?tid=4496) |
யா/ உடுத்துறை மகாவித்தியாலத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற இரு ம - iruvizhi - 04-12-2005 கடந்தவாரம் வெளியாகிய ஜி.சீ.ஈ பரீட்சை முடிவுகளின் படி யா/ உடுத்துறை மகாவித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்தர வகுப்பினை தொடர தகுதியினை பெற்றுள்ள இரண்டு மாணவர்கள் சுனாமி பேரலையின் சீற்றத்திற்கு உள்ளாகி உயிரிழந்துவிட்டனர். இவர்களில் வன்னியசிங்கம் நிவோஸ் என்ற மாணவன் 4ஏ. 3பி. 2சீ பெறுபேற்றையும். நாகதம்பி ராதிக என்ற மாணவி 2பி. 3சீ. 3எஸ் என்ற பெறு பேற்றையும் பெற்றுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் பரீட்சை முடிந்த 2 நாள்களின் பின்னர் இடம்பெற்ற ஆழிப்பேரலையின் அனர்த்தம். அவர்கள் தாம் எழுதிய பரீட்சையின் முடிவுகளை அறிந்துகொள்ள முடியாத கொடூர நிலையை ஏற்படுத்திவிட்டது என சம்பந்தப்பட்ட பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர். நன்றி உதயன் நாளிதள் - tamilini - 04-12-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 04-12-2005 இதே போல் பல சம்பவங்கள் நாங்கள் படிக்கும் காலத்தில் நிகழ்ந்தது.. உயர்தரத்தில் சிறந்த பரீட்சைப் பெறுபேற்றைப் பெற்ற மாணவன்...சிறீலங்கா விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டிருந்தார்... பரீட்சை முடிவுகள் வெளியாக முன்.. இந்தியப் படைகள் காலத்தின் அதன் கூலிப்படைகளால் பல மாணவர்கள் சுட்டுச் சுட்டு வீதியில் எறியப்பட்டிருந்தனர்...அவர்களில் பலர் திறமைசாலிகளாகவும் இருந்தனர்...! அப்படி ஒரு மாணவனை சுட்டு வானில் கொண்டு வந்து நடுவீதியில் எறிந்ததை கண்ணால் கண்டோம்...சிறுவர்களாக இருந்ததால் வந்தவர்கள் எங்களை உயிரோடு விட்டுச் சென்றுவிட்டார்கள்...! இவை மிகவும் மன வேதனை அளிக்கும் விடயங்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- iruvizhi - 04-14-2005 இப்போது மட்டுன் என்னவாம். சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் படிக்கும் மாணவர்களைத்தானே விபத்து என்னும் பெயரில் கொன்றொளிக்கின்றார்கள். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே சரியாக நிவாரணங்கள் சென்று சேரவில்லையே..... - sinnappu - 04-15-2005
|