Yarl Forum
இந்த இணையத்தளத்து யாராவது போயிருக்கிறீர்கிளா?.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: இந்த இணையத்தளத்து யாராவது போயிருக்கிறீர்கிளா?.. (/showthread.php?tid=448)



இந்த இணையத்தளத்து யாராவது போயிருக்கிறீர்கிளா?.. - Snegethy - 03-24-2006

சில நிமிடங்களுக்கு முதல் CBC தொலைக்காட்சியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கல்முனைப் பகுதி பற்றிய ஒரு ஐந்து நிமிட விவரணம் பார்த்தேன்.

கனடாவில் இருந்து சென்ற குழந்தை வைத்திய நிபுணர் குழந்தைகளைப் பார்வையிடுதல்.

அங்குள்ள பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்கள் நடைபெறுதல்.

சின்னஞ்சிறிய சிறாருக்கான பாடசாலை அமைக்ப்டுதல்.

உயர்தரப்பாடசாலைக்கான புதிய கட்டிடம் மாணவர்களாலே அமைக்கப்படுதல்.

இப்படி பல விடயங்களைக் காட்டினார்கள்.
இந்த நல்ல விடயங்களுக்கு பொறுப்பான அமைப்பினுடைய இணையத்தள முகவரி இதோ.www.rosecharities.net

இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது என்னையும் அறியாமல் சிரிக்க வச்ச ஒரு காட்சி இது:

5 அல்லது 6 வயது சிறுவர்கள் சறுக்கீஸ் விளையாடினம் .....அப்ப ஒரு குட்டி ஆள் சறுக்கிக் கொண்டு வர அதை ஒளிப்படம் எடுக்கினம் இடையில ஒரு இன்னொரு சின்னத்தம்பி ஓடி வர அந்தக் குட்டி ஆள் சொல்றார்
"டேய் அவ என்னத்தான் வீடியோ எடுக்கினம் நீ தள்ளுடா"


- Nitharsan - 03-24-2006

இணைப்பிற்க்கும் தகவலுக்கும் நன்றிகள்.....


- aathipan - 03-24-2006

நானும் பாக்க வேண்டும்


- மின்னல் - 03-24-2006

அந்த வீடியோவை பார்க்க முடியாதா Snegethye?


- வினித் - 03-24-2006

மின்னல் Wrote:அந்த வீடியோவை பார்க்க முடியாதா Snegethye?


வீடியோவை பார்த்து என்ன செய்ய போறிங்கள்?

எடுத்த காட்சியை பாருங்கள் மின்னல் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 03-24-2006

தகவலுக்கு நன்றிகள் சிநேகிதி


- Snegethy - 03-24-2006

வினித் அண்ணா உங்கட லொள்ளும் நீங்களும்....அண்ணி கணவருக்காக பாத்திட்டாவாம் உங்களக் கூப்பிடுறா போங்கோ கெரியா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

மின்னல் அந்த ஒளித்தொகுப்பு செய்திக்குப் பிற்பாடு போட்டார்கள இந்த தள முகவரிதான் தந்தார்கள்.இந்தத் தளத்தில் சில விவரணப்படங்கள் இருக்கு நீங்களும் தேடிப் பாருங்கள் நானும் நேரம் இருக்கும்போது பார்க்கிறேன.இருந்தால் இணைப்புத் தாறன்.