Yarl Forum
ஒரே சாதிதான்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஒரே சாதிதான்! (/showthread.php?tid=4453)



ஒரே சாதிதான்! - AJeevan - 04-18-2005

[size=15]நிலத்தால் தமிழகமும் தென் ஆப்பிரிக்காவும் ஒரு சில கோடி நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது. இப்படி இருக்கையில், தமிழகத்தில் எப்படி சிவப்புத் தோல் உடையவர்கள் வந்தார்கள்? மதன் உள்பட எல்லாரும் வாஸ்கோடகாமா வாரிசுகளா?


தமிழகம் மட்டும் இல்லை... லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியாவே ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியாகத்தான் இருந்தது. பிறகு, அங்கேயிருந்து பிய்த்துக்கொண்டு ஒரு ராட்சச பஜ்ஜி மாதிரி மிதந்து சென்று, ஆசியாவோடு ஒட்டிக்கொண்டது. உலகில் மக்களே இல்லாத காலம் அது! பிறகு, ஆப்பிரிக்கர்கள் நெடும் பயணம் மேற்கொண்டனர். குழுக் குழுவாகப் பிரிந்து அவர்கள் போய்ச் சேர்ந்த இடத்தின் பருவ நிலையைப் பொறுத்து, அவர்களுடைய தோல் நிறம் மாறியது.

அப்போது சாதிகளே கிடையாது என்றாலும், தோல் நிறத்தைப் பொறுத்து சரமாரியாகக் கலப்புத் திருமணங்களும் நிகழ்ந்தன. ஆகவே, அடிப்படையில் நாமெல்லாருமே ஒரே சாதிதான்! நம்மைப் பிரித்துவைத்தது இடைத் தரகர்களே! (வாஸ்கோடகாமா என்னைப் பார்த்தால், Ôகறுப்பர்Õ என்றுதான் அழைப்பார்!)

நன்றி: விகடன் மதன்

உங்கள் கருத்தைச சொல்லுங்கள்?


- kuruvikal - 04-18-2005

சாதி என்பது மனிதன் தனக்குத்தானே அளவுகோலிட்டு தன்னைத்தானே பிரித்துக் கொள்ளும் முறைகளில் ஒன்று....! தெற்காசியாவில் தொழில் ரீதியில் என்றால்...மேற்கில் அது தோல் ரீதியில்.... இயற்கையில் மனித அளவுகோல் என்பது எது சார்ந்தெழுகிறது என்றால்...மனிதன் மனிதனை ஆள்வதற்காக...அந்த வகையில் சாதியும் மனிதன் மனிதனை ஆள உருவாக்கப்பட்ட ஒரு அளவுகோல்...! அதன் அவசியம் என்பது இயற்கையில் மனித வாழ்வுக்கு அவசியமே இல்லை....! Idea


- tamilini - 04-18-2005

நம்ம நாட்டிலையும் இந்த சாதியியம் இருக்கில்லா..?? கூடுதலானவை வெளியில சாதியில்லை அது இல்லை என்பார்கள். தங்கள் வீடு வாழ்க்கை என்றவுடன் முதல் எடுக்கிறதே அது தான். :wink: Idea


- kuruvikal - 04-18-2005

tamilini Wrote:நம்ம நாட்டிலையும் இந்த சாதியியம் இருக்கில்லா..?? கூடுதலானவை வெளியில சாதியில்லை அது இல்லை என்பார்கள். தங்கள் வீடு வாழ்க்கை என்றவுடன் முதல் எடுக்கிறதே அது தான். :wink: Idea

வீட்டுக்கதானே..வெளிய ஏன்....அதைச் சொல்லுறீங்க... வீட்டுக்க நடக்கிறதுகள் எல்லாத்தையும் வெளியில சொல்ல முடியுமோ...உங்களால...??! :wink: Idea


- tamilini - 04-18-2005

வீட்டுக்கை பாக்க வெளிக்கிட்டால் பாதிக்க போறது.. வெளியாக்களாய் இருக்கலாம் இல்லையா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 04-18-2005

tamilini Wrote:வீட்டுக்கை பாக்க வெளிக்கிட்டால் பாதிக்க போறது.. வெளியாக்களாய் இருக்கலாம் இல்லையா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இப்பவும் ஈழத்து பழைய வாரிசுகளட்ட சாதியம் இருக்கு...முந்தி வெளியில இருந்தது இப்ப வீட்டுக்க இருக்கு.... அதாவது வெளியாக்களில காட்டிக்க மாட்டினம்...தங்க குடும்ப விவகாரங்களுக்க வைச்சிருப்பினம்..ரகசியமா..அதுவும் காலப்போக்கில் காணாமல் போயிடும்...! :wink: Idea


- tamilini - 04-18-2005

அதைத்தான் சொன்னம். காலப்போகில.. காணமல் போயிவிடும் என்றது வேறை.. இப்பவும் இருக்கு என்றது தான் உண்மை.. :wink:


- kuruvikal - 04-18-2005

tamilini Wrote:அதைத்தான் சொன்னம். காலப்போகில.. காணமல் போயிவிடும் என்றது வேறை.. இப்பவும் இருக்கு என்றது தான் உண்மை.. :wink:

ம்...நிகழ்வதை எப்படி மறுப்பது...! பத்திரிகைகளிலையே போடுறாங்களே..அந்த சாதி இந்த சாதி என்று மணமகன் மணமகள் தேடல் விளம்பரங்களில்...! Idea


- tamilini - 04-18-2005

ம்.. புரிஞ்சு கொண்டால் சரி.. அதைத்தான் சொன்னம். :wink:


- kuruvikal - 04-18-2005

நிகழ்காலத்தைப் புரிஞ்சி கொள்ளத்தான் வேண்டும்...அதற்காக அதையே தொடர நாங்களே வழிகாட்டக் கூடாது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- stalin - 04-18-2005

உலகில் எங்கு வாழ்ந்தாலும் மனதில் இந்த குடாநாட்டு மனப்பான்மை இருக்கும்வரையும் இந்த சாதியம் இருக்கும். பாருங்களேன் 150 வருடத்துக்கு முன்பு இடம்பெயர்ந்த உகண்டா கென்யாவிலிருந்து வந்த குஜராத்தி இந்தியன் இன்றும் புலத்தி லும் பட்டேலுக்கும் ப்ட்டேலுக்குமே திருமணம் செய்ய விரும்புகிறான்


- Nitharsan - 04-18-2005

stalin Wrote:உலகில் எங்கு வாழ்ந்தாலும் மனதில் இந்த குடாநாட்டு மனப்பான்மை இருக்கும்வரையும் இந்த சாதியம் இருக்கும். பாருங்களேன் 150 வருடத்துக்கு முன்பு இடம்பெயர்ந்த உகண்டா கென்யாவிலிருந்து வந்த குஜராத்தி இந்தியன் இன்றும் புலத்தி லும் பட்டேலுக்கும் ப்ட்டேலுக்குமே திருமணம் செய்ய விரும்புகிறான்

அண்ணா அது ஜாதியில் பிரகாரம் அல்ல அது அவர்களது முறை.. (அதற்காய் குஜராத்தியர்களிடம் ஜாதி மனப்பாங்கு இல்லை என்று கூற வரவில்லை) அவர்கள் புலம் பெயர்நதும் தங்கள் இனத்தில் சிறப்பினை கட்டீக்காக்க விரும்புகின்றனர். உதரணமாக ஒரு தமிழன் வேற்று நாட்டுக் பெண்ணை திருமணம் செய்யும் போது.. எங்களது பண்பாடு அங்கு இரண்டாது இடத்துக்கு போகிறது.. எனவே நாங்கள் எங்கள் இனத்துக்குள்ளே திருமணம் செய்ய வேண்டும் என்ற சமூக கட்டுப்பாடு தானாகவே எமக்கு உருவாகிறது. அதே போலத்தான் குஜராத்தியர்களும். ஜாதி என்பது நாடுகளுக்குற்ப்ப வித்தியாசப்படுகின்றது. எங்கள் நாட்டில் செய்யும் தொழில்களுக்கேற்ப மட்டுமன்றி ஆளும் வர்கம் ஆளப்படும் வர்க்கம் என்ற வகையிலுமு் ஜாதி பிரித்தாளப்ப படுகின்ற்து. (அதாவது பணமுள்ளவன் ஏழை என்ற ரீதியில்) செல்வாக்கு உள்ள ஒருவனிடம் எவனும் ஜாதி பற்றிப் பசெ மாட்டன். ஆனால் ஒரு ஏழையிடம்.... நிச்சயம் அதைப்பற்றி கேட்டேதிருவான். இந்தியா மக்கள் தமது அரச அலுவல்களில் ஜாதி முறையில் பாகு படுத்தப்பட்டுள்ளனர்.. ஆனால் எமது நாட்டில் அப்படியான தொரு சூழல் இருப்பதாய் இது வரை நான் அறியவில்லை


- stalin - 04-19-2005

தேசிய விடுதலைபோராட்டத்தின் தாககத்தால் தொழில் முறைப்பிரிவு சாதியின் அழுத்தம் தாயகத்தில் குறைந்திருக்கலாம் ஆனால் திருமண பந்தம் என்றும் வரும்போது சாதியம் தலைதூக்கததான் செய்கிறது முன்பு யாழ்ப்பாணத்திலும் தொழில் முறைப்பிரிவின்படியே சாதியம் வகுக்கப்பட்டது. யாழில் தேநீர்க்கடைகளில் இரண்டு தேநீர் கப் வைக்கப்பட்டிருந்து என்று கூட கேள்விப்பட்டிருக்கிறேன்----------------ஸ்ராலின்


- Eelavan - 04-19-2005

http://www.thinnai.com/sc0311051.html