Yarl Forum
மீனாட்சி கோவில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: மீனாட்சி கோவில் (/showthread.php?tid=4451)



மீனாட்சி கோவில் - hari - 04-18-2005

மீனாட்சி கோவில் உலக அதிசயமானதாக வதந்தி!
ஏப்ரல் 18, 2005

மதுரை:

உலக அதியசங்களுள் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக செல்போன்கள் மூலம் மதுரையில் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.


புதிய 7 உலக அதிசயங்களை தேர்வு செய்வதற்கான கருத்துக் கணிப்பு இணைய தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவிலுள்ள தாஜ்மஹால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள், கோவில்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் மதுரையில் செல்போன் வைத்திருந்தவர்களுக்கு நேற்று எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு செய்தி வந்தது. அதில், மீனாட்சி அம்மன் கோவில் உலக அதிசயமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், மதுரையில் புதிய பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த எஸ்.எம்.எஸ். தகவல் வதந்தி எனப் பின்னர் தெரியவந்ததால் பரபரப்பு அடங்கியது.

நன்றி தட்ஸ்தமிழ்

<b>
7 உலக அதிசய தேர்வு நடக்கும் இணையத்தளம், நீங்களும் வாக்களிக்கலாம்!</b>


- vasisutha - 04-18-2005

மன்னர் எப்ப இந்த வேலையில இறங்கினீங்கள்? :wink:


- hari - 04-19-2005

vasisutha Wrote:மன்னர் எப்ப இந்த வேலையில இறங்கினீங்கள்? :wink:
ஏன் நல்ல விடயம் தானே? அதுவும் என்ட பாட்டன் கட்டிய கோவில் அல்லவா, உலக அதிசயம் ஆனால் எனக்கும் பெருமைதானே!