![]() |
|
பாதிப்பு தரும் குறும்பட விழாத் தேர்வுகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: பாதிப்பு தரும் குறும்பட விழாத் தேர்வுகள் (/showthread.php?tid=4448) |
பாதிப்பு தரும் குறும்பட விழாத் தேர்வுகள் - AJeevan - 04-18-2005 <span style='color:blue'> <img src='http://www.yarl.com/forum/files/mediaback.jpeg' border='0' alt='user posted image'> நம்மவர் குறும்பட விழாக்கள் நடை பெறுகின்றன. பாராட்டுதலுக்குரியது. தேர்வுகளை சினிமா தெரிந்தவர்களையோ ஆர்வலர்களையோ வைத்து நடத்துகிறார்கள். நல்லது.............................. ஆனால் பலரது புலனுக்குப் புரியாத புதிரான ஒரு குறைபாடு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதை குறும்படப் போட்டிகளை நடுத்துவோரோ அல்லது நடுவர்களோ பெரிதுபடுத்துவதில்லை என்பதை விட அலட்சியமாக மக்களை மண்டபத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்றே நினைக்கிறார்கள் என்ற தோற்றத்தை குறும்பட விழாக்கள் உருவாக்கி வருகிறது. மனம் நொந்து வேதனைப்படுவோர் படைப்புகளை உருவாக்கிய படைப்பாளிகளும் கலைஞர்களுமேயாகும். இதற்கான காரணங்களை - கருத்துகளை புலம் பெயர் தமிழ் சினிமா வளர்ச்சிக்கான ஆர்வலர்கள் முன் வைக்க வேண்டும். என் கண்களுக்கு பட்டவற்றை அல்லது எனக்குத் தோன்றியதை இங்கேயாவது எழுதினால் அதை யாராவது கருத்தில் எடுத்து செயல் பட்டால் அது நமது எதிர்காலப் படைப்பாளிகளுக்கு நன்மை தரும் என்று கருதுகிறேன். <b>1.</b> குறும்படங்களை இறுதி நேரம் பெற்றுக் கொள்ளும் நோக்கோடு விழாக்களை ஏற்பாடு செய்யாதீர்கள். காலம் தாமதித்து வரும் குறும்படங்களை ஏற்றுக் கொள்ளாதீர்கள். இதுவே விவாதிக்கவோ நீதி கேட்கவோ முடியாதவர்களாக படைப்பாளிகள் மற்றும் விழா நடத்துனர்கள் ஆவதற்கு காரணமாகிறது. படங்கள் கடைசியில்தான் கையில் கிடைத்தது என்று ஒரு சாராரும் இறுதி நேரம் வரை சில பிரச்சனைகளால் நேரத்துக்கு அனுப்ப முடியவில்லை என்று ஒரு சாராரும் காரணங்கள் சொல்லித் தப்பிக்க முடிகிறது. <b>2. </b> குறும்பட தேர்வுகள் திரையிடப்படும் நாளில் நடைபெறுவதை நான் கண்டது எமது தமிழ் புலம் பெயர் குறும்படப் போட்டிகளில்தான். இது என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. இதை நான் வன்மையாக எதிர்க்கிறேன். தேர்ந்தெடுக்கும் நடுவர்கள், ஆகக் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னமேயாவது பார்வைளர்கள் இல்லாமல் ஒன்றாக இருந்து ஒவ்வொரு படமாகப் பார்த்து , விவாதித்து புள்ளிகள் இட்டுத் தேர்வு செய்ய வேண்டும். அது தலைமை நடுவராலும் ஏனைய நடுவர்களாலும் பக்க சார்பற்ற நிலையில் புள்ளிகள் இடப்பட்டுள்ளளன என ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும். அது இல்லாத விடத்து யாராவது ஒரு நடுவர் கருத்து முரண்பட்டாலும் மீண்டும் அதே படத்தை திரையிட்டு ஒரு இறுதியான முடிவுக்கு வர வேண்டும். ( சிறிது நேரம் அதாவது 5 முதல் 15 நிமிட ஓய்வுக்குப் பின்னர், அதாவது முதல் படத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காகவே இந்த இடைவேளை) அந்த முடிவுகள் சரியாகி ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர்தான் அடுத்த படத்தை திரையிட்டுப் பார்த்து புள்ளி வளங்கப்பட வேண்டும். இப்படியல்லாது ஒரேயடியாகவோ அல்லது 5-6 நிமிட இடைவெளிக்குப் பின் அடுத்தடுத்துப் படங்களை ஓட விடுவது மிக மிகத் தவறான ஒரு செயலாகும். <b>எங்களால் முடியும் என்பார்களும் இருக்கிறார்கள்.</b> அவர்களிடம் 5 சிறு கதைகளைக் கொடுத்து தொடர்ந்து படித்து விட்டு இதன் நன்மை தீமைகளை விளக்கச் சொல்லுங்கள். அத்தோடு அதன் சில பகுதிகளைப் பார்க்காது குறிப்பிட்டு சொல்லச் சொல்லுங்கள். அது 100க்கு 100 சதவீதம் இயலாத காரணமாகும். அதற்கு மேலான ஒன்று, பெண்கள் சாறிகளை தேர்ந்தெடுக்கும் போது ஏற்படும் பிரச்சனையை ஒரு கணம் மனக் கண் முன் கொண்டு வாருங்கள். ( கோபப் படக் கூடாது பெண்கள்) விபரீதம் புரியும்.................... இப்படி நேரம் ஒதுக்க முடியாத நடுவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள் அல்லது தேர்வு செய்யும் போட்டி விழாக்களாக அறிவிக்காதீர்கள். <b>பார்வையாளர் தேர்வாக மட்டுமே நடத்துங்கள்.</b> குமுதம், தினகரன்,...................... போன்ற பத்திரிகைகள் வாசகர்கள் தேர்விலேதான் தேர்வுகளை நடத்துகின்றன. இவை பொழுது போக்கு படங்களுக்கோ, கலைஞருக்கோ எதுவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இவர்கள் கூட பக்க சார்பாகவே செயல்படுவதாக அவர்களே சொல்லுகிறார்கள். அது அவர்களுக்குள் இருந்து விட்டுப் போகட்டும். எமக்குள் வேண்டாம். இது எம்மவரால் எமக்காக வளர்க்க வேண்டியதற்காக செய்வதாயிருந்தால் அது கொடுமையானது மட்டுமல்ல அநியாயமும் கூட.................. யாருக்குள்ளும், ஒரு சார்புத் தன்மை இருக்கும். இது பொது மனித இயல்பு. எனக்கு என் குடும்பம் மீது பற்று இருக்கும். ஆனால் நாலுபேருடன் அது விவாதத்துக்கு வந்தால் சமூக நீதியொன்று இருக்கிறதே என்று கொஞ்சமாவது அனுசரித்துப் போக வேண்டி வருகிறது. அதுபோலவே இக் குறும்படத் தேர்வுகள் பார்வையாளர்கள் அற்ற நிலையில் பார்க்கும் போது ஒரு சமூக விவாதத்துக்கு நடுவர்கள் தம்மை உட்படுத்திக் கொண்டு ஒரு பாதிப்பற்ற முடிவுக்காவது வரலாம். அப்படியில்லாத நிலையில் நடுவர்கள், பார்வையாளர் மற்றும் படைப்பாளிகள் முன் விவாதிக்க முற்றபட்டால் நிலமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். அதுவே புதிய படைப்பாளிகளுக்கு மட்டுமல்ல, இருக்கும் படைப்பாளிகளுக்கும் படைப்புகளை உருவாக்க வழி செய்யும்........................... உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். </span> - Kurumpan - 04-18-2005 நல்ல யோசனைகள் அஜீவன் அண்ணா. ஆனால்ää விழா நடத்துனர்கள் சிந்திப்பார்களா???? :roll: - AJeevan - 04-18-2005 Kurumpan Wrote:நல்ல யோசனைகள் அஜீவன் அண்ணா. அவர்கள் யோசிக்கிறார்களோ இல்லையோ இதுதான் நடைமுறை குறும்பன். சில நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்படாமல் இருக்கும் போது அது தொடருகிறது......................... சில வேளைகளில் பலருக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற ஆதங்கம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் சில வேளைகளில் தெரியாமல் இருக்கலாம். படைப்பைக் கொடுக்கு முன் படைப்பாளிக்கும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு. போட்டி முடிவு அறிவித்த பின் கேள்வி கேட்க முடியாது. நல்லதாகத்தான் செய்தாலும் விபரம் தெரிந்து செய்தால் நாம்தானே முன்னேறுவோம்................... - Nitharsan - 04-18-2005 யோசனைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின் அதற்க்கு அனைத்து கலைஞர்களும் ஒன்றாக வேண்டும்... இப்பிரச்சினைகள் வருவதற்க்கு (பக்கச் சார்பு நிலை) குறிப்பிட்ட ஒரு கலைஞரும் காரணமாக இருக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட போவது அஜீவன் அண்ணா சொன்னது போன்று திறமையுள்ள கலைஞர்களே!... - AJeevan - 04-18-2005 நிதர்சன் எல்லோரும் நல்லதை செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்திலதான் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த விதத்தில் நன்றி சொல்லயே ஆக வேண்டும். ஆனால் சரியான நடை முறைகள் தெரியாமையால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது பாதிக்கப்படலாம்............................. போட்டிகளை நடத்துவதென்பது மிகக் கடினமான ஒரு தலையிடி கொண்ட பணி. தேர்வுக் குழுவுக்கான காலத்தை முன்னரே நிர்ணயித்து தேர்வு செய்ய வேண்டுமென்றே கூறுகிறேன். சுனாமி வரும் வரை யாருக்கும் தெரியாது. வந்த பின் அடுத்து முகம் கொடுக்க பல ஆலோசனைகளைச் சொல்கிறார்கள். <b>அதுபோல பாதிக்கப்பட்டதாக பலர் முறையிடுகிறார்கள்.</b> நடந்ததை திருத்த முடியாது. நடப்பதை திருத்த இப்போதும் வழி சொல்லா விட்டால் பழக்க தோசமாகி, அதுவே அடுத்த தவறுக்கும் வழிகோலி விடும். |