![]() |
|
ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்? (/showthread.php?tid=4443) |
ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்? - vasisutha - 04-19-2005 வெள்ளிக்கிழமை (15 ஏப்ரல் 2005) அன்று சென்னையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் பல தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட்டனர். அதில் தமிழ் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியும் உள்ளது. இன்று மாலை எனக்கு அந்தக் குறுந்தகட்டின் நகல் கிடைத்தது. இன்று காலையே நாராயண் அந்தக் குறுந்தகட்டில் உள்ள ஃபயர்ஃபாக்ஸ் பற்றிக் கேட்டிருந்தார். அது முகுந்த் (தமிழா குழு) செய்ததாக இருக்கும் என்று தான் சந்தேகப்படுவதாகச் சொன்னார். எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்தது. எனவே மென்பொருள் சிடி கையில் கிடைத்ததுமே முதலில் நான் பார்வையிட்டது அதைத்தான். ஈயடிச்சான் காப்பி என்று சொல்வார்களே, அதைப்போல இருந்தது. இது முழுக்க முழுக்க முகுந்த் மற்றும் அவரைப்போன்ற தன்னார்வலர்களின் வேலை. ஆனால் CDAC செய்தது என்று சொல்லியிருக்கிறார்கள். முகுந்த் கொடுத்த பொதியில் உள்ள தவறுகள் கூட இதில் அப்படியே வந்துள்ளது. உதாரணம் "மாலுமி கருவிப்சட்டம்" - அதாவது 'ச்' வருவதற்கு பதில் 'ப்' தவறாக உள்ளது. ஒரே இடத்தில்தான் முகுந்த் செய்யாத ஒரு மொழிமாற்றம் (Close = மூடு) வந்துள்ளது என்பது மேலோட்டமாகப் பார்த்ததில் தெரிய வந்தது. ஆனால் இந்தக் குறுந்தகட்டில் முகுந்த், மற்றும் தமிழா குழுவினர் பெயர்கள் இல்லை. அவர்கள் செய்த வேலை அங்கீகரிக்கப்படவில்லை. இந்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இதுபற்றி மேலே விசாரிக்க முகுந்திடம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அவர் இதுபற்றிய மேலதிக விவரங்களை அறிவாரா என்று தெரியவில்லை. அவரிடமிருந்து இதுவரையில் பதிலில்லை. அதைப்போலவே ஓப்பன் ஆஃபீஸ் தமிழ்ப்படுத்துதலிலும் அதிகாரபூர்வமாக முகுந்த்தான் ஈடுபட்டுள்ளார். ஆனால் CDAC தானாக ஓர் ஓப்பன் ஆஃபீஸ் தமிழ்க் கோப்பை வெளியிட்டுள்ளது. இந்த forking தேவையா என்று தெரியவில்லை. நான் இன்னமும் ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருளைச் சோதனை செய்யவில்லை. ழ கணினி குழுவினர் ஓப்பன் ஆஃபீஸைத் தமிழ்ப்படுத்துவதில் முனைந்தபோது ஏன் அவர்களும் முகுந்த்/தமிழா குழுவினருடன் இணைந்து செயல்படக் கூடாது என்றொரு பிரச்னை எழுந்தது. இந்திய அரசு நிறுவனம் தன்னார்வலர்களின் செயல்களைக் கேவலமாக நினைக்கக் கூடாது. தன்னார்வலர்களைத் தூண்டிவிடுதலே இந்தியாவுக்கு நல்லது. பிற மென்பொருள்களைப் பார்வையிட்டபின் நாளை எழுதுகிறேன். நன்றி பத்ரி http://thoughtsintamil.blogspot.com :roll: :roll: - vasisutha - 04-19-2005 கேவலமான அரசியல்வாதிகள். நானும் முதலில் ஏதோ பெரிதாக சாதிக்க போகிறார்கள் என்று எண்ணிவிட்டேன். கடைசியில் பார்த்தால் இப்படி :evil: :evil: :evil: - karna - 06-07-2005 நல்ல விசயங்கள் பாரட்டப்படவேண்டும் என விரும்பி செய்வதில்லை. அதைப் போலத்தான் தமிழா குழுவினரின் முயற்சியும். நன்றிகள் மிகப்பல......... |