![]() |
|
புதிய பாப்பரசர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: புதிய பாப்பரசர் (/showthread.php?tid=4440) |
புதிய பாப்பரசர் - Mathan - 04-19-2005 புதிய பாப்பரசர் <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41050000/jpg/_41050377_smoke203iap2.jpg' border='0' alt='user posted image'> புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் தொடந்து நடைபெற்று வரும் போதிலும் இதுவரை யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதை குறிக்கும் வகையில் கூட்டம் நடக்கும் கட்டிடத்தில் உள்ள புகைக்கூண்டு ஊடாக கறுப்பு புகை வெளிவந்தது. நன்றி. பிபிசி இணையத்தளம் - Mathan - 04-19-2005 <img src='http://news.bbc.co.uk/media/images/41047000/jpg/_41047485_get300ratzing.jpg' border='0' alt='user posted image'> ஜென்மனியின் ரட்சிங்கர். தற்போது கார்டினல்கள் கல்லூரியின் தலைவராகவும் இருக்கின்றார், புதிய பாப்பரசராக வரும் வாய்பு இவருக்கு அதிகமாக இருக்கின்றது <img src='http://news.bbc.co.uk/media/images/41047000/jpg/_41047483_ap300x245clothes.jpg' border='0' alt='user posted image'> புதிய பாப்பரசருக்கான உடைகள் <img src='http://news.bbc.co.uk/media/images/41047000/jpg/_41047473_afp300curtain.jpg' border='0' alt='user posted image'> புதிய பாப்பரசர் முதன் முதலாக மக்களுக்கு காட்சி தரப்போகும் சாளரம் நன்றி. பிபிசி இணையத்தளம் - Malalai - 04-19-2005 நன்றி மதன் அண்ணா.... - vasisutha - 04-19-2005 Mathan Wrote:[size=14]ஜென்மனியின் ரட்சிங்கர். தற்போது கார்டினல்கள் கல்லூரியின் தலைவராகவும் இருக்கின்றார், புதிய பாப்பரசராக வரும் வாய்பு இவருக்கு அதிகமாக இருக்கின்றது புதிய பாப்பரசராக இவரே தெரிவு செய்யப்பட்டுள்ளார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- AJeevan - 04-20-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41034000/jpg/_41034217_ratzinger_gi203b.jpg' border='0' alt='user posted image'> <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41052000/jpg/_41052735_ratzinger2_203.jpg' border='0' alt='user posted image'> [b]<span style='color:green'>புதிய பாப்பரசருக்கு வாழ்த்துகள் [size=15]புதிய பாப்பரசராக ஜேர்மன் நாட்டின் வண.யோசவ் ரட்சிங்கர் (பெனடிக்ற்) தெரிவாகியுள்ளார் அதன்படி வெள்ளைப் புகை வெளியேறிக்கொண்டிருப்பதுடன் வத்திக்கான் ஆலய மணியும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 265வது பாப்பரசராக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கருதினாலும் கடந்த 24 வருடங்களாக வத்திக்கானின் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசராக ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கார்டினல் ஜோசப் ரட்ஷிங்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 78. தனது புதிய பாப்பரசருக்கான பெயராக 16வது பெனடிக்ற் என்ற பெயரைத் தெரிவு செய்துள்ளார். இவர் இதுவரை முனிச் நகருக்கான கார்டினலாக செயற்பட்டவராவார். இவர் பாப்பரசர் புனித பதினாறாவது பெனடிக்ட் என்று அழைக்கப்படுவார். புனித பீற்றர்ஸ் சதுக்கத்தின் சாளரத்தின் ஊடாக தோன்றிய புதிய பாப்பரசர் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு முதல் தடவையாக தனது வாழ்த்துகளை தெரிவித்தார். ஜேர்மனிய பழைமைவாத இறையியல் சிந்தனையாளரான ஜோசப் ரட்ஷிங்கர் அவர்கள், மறைந்த பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பரின் நெருங்கிய ஆலோசகருமாவார். பாப்பரசர் புனித பதினாறாவது பெனடிக்ட் , சர்ச்சைக்குரிய கருத்தடை, கருச்சிதைவு, ஓரினச்சேர்க்கை மற்றும் பெண்களுக்கான குருத்துவப் பணிகள் போன்ற விசயங்களில், மறைந்த முன்னாள் பாப்பரசரின் கொள்கைகளை பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </span> - sinnappu - 04-20-2005 ஐயா நீங்கள் வந்தது சந்தோசம் ஐயா எங்கட நாட்டையும் கவனியுங்கோ ஐயா சரியா துன்பப்படுறம் இயற்கையாலும் சரி செயற்கையாலும் சரி உதவி செய்வீங்கள் எண்டு நம்பிறம்
- AJeevan - 04-20-2005 நல்ல கொமடி.............. - kuruvikal - 04-20-2005 <img src='http://img234.echo.cx/img234/7626/popebenedictxvi5ck.jpg' border='0' alt='user posted image'> <b>புதிய பாப்பரசர் தொடர்ந்தும் ஆன்மீக வழியில் பற்றுறுதியோடு நின்று உலக மக்களை வழிநடத்தி அன்பும் கருணையும் அமைதியும் பெருக்கி போர் வறுமை பிணி அடக்குமுறைகள் நீக்கி மனிதம் வாழ வழிகாட்டட்டும்....!</b> - sinnappu - 04-20-2005 Quote:AJeevan எது குஞ்சு :wink: :wink: :?: :?: - adithadi - 04-20-2005 ஏன் பழமை வாய்ந்த வண.யோசவ் ரட்சிங்கர் (பெனடிக்ற்) தெரிவு செய்தார்களோ தெரியவில்லை. இவர் பெண்கள் குருவாக வருவதற்கு எதிராக உள்ளார். ஏன் பெண்களுக்கு தகுதி இல்லையா? கருத்தடைக்கு இவர் எதிரானவர்! இதனால் வறுமையும், எயிட்ஸ் நோய்யும் கூடிக்கொன்டே போய்கிறது - Mathan - 04-21-2005 புதிய பாப்பரசர் - தொடரும் ஏமாற்றம்! 265வது பாப்பரசராக, 78 வயதான ஜோஸப் ரட்சிங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய பாப்பரசரை தெரிவு செய்ய கூடிய 117 கர்தினல்களுள், ஜெர்மானியரான இவரே மூத்தவர். மற்ற அனைவரும் மறைந்த பாப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள். மறைந்த இரண்டாம் ஜான் பால் அவர்கள் கர்தினலாக இருந்த காலத்திலேயே இவரும் கர்தினாலாக இருந்தவர். இவர் மறைந்த பாப் ஜான் பாலுக்கு நெருக்கமானவர். அவரின் பல்வேறு பழமைவாத முடிவுகளுக்கு பின்னணியில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாற்றங்கள் குறித்து எவ்விதமான சமாதானத்திற்கும் இடங்கொடுக்காமல் எதிர்த்து வந்தவர். கத்தோலிக்க திருச்சபைக்குள் மாற்றத்தை எதிர்ப்பவர்களுள் முதன்மையானவர். பழமையை போற்றுபவராகவும், கட்டிக்காப்பவராகவும் அறியப்படுபவர். இவர் கடுமையாக எதிர்ப்பவைகள்: 1.கன்னியாஸ்திரிகளுக்கு குருமார் அந்தஸ்து. 2.பாதிரியார்களை திருமண பந்தந்திற்கு அணுமதிப்பது. 3.மீளமுடியாத கடும் நோயுற்றோரை இறக்க அனுமதிப்பது. (கருணை கொலை) 4.கருத்தடை. 5.கருக்கலைப்பு. 6.ஓரினச் சேர்க்கை. 7.திருமண பந்தமின்றி ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தல். 8.ராக் இசை. 9.க்ளோனிங். 10.உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை. இந்த முறை கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் தென் அமெரிக்கா அல்லது ஆப்ரிக்க, ஆசிய நாட்டவர் பாப்பரசராக ஆக தேர்ந்தெடுக்க படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அது பொய்யாக்கப்பட்டு மீண்டும் ஒரு ஐரோப்பியர் ஒருவரே வாடிகன் தலைமையை ஏற்கிறார். பல்வேறு மாற்றங்களுக்கான கோரிக்கைகள் கத்தோலிக்கர்களால் எழுப்பப்பட்டு வரும் இவ்வேலையில், ஒரு பழமைவாதியை பாப் ஆக தெரிவு செய்ததிலிருந்து, எவ்வித மாற்றங்களுக்கும் திருச்சபை தயாரில்லை என்பது உணர்த்தப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு ஏமாற்றமே என்ற போதும், பழமைவாதிகளுடன் சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவே கூறப்பட்டுகிறது. இப்போதைய கால கட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையை எவ்வித மாற்றமும் இன்றி வழி நடத்தி செல்லக்கூடிய ஒருவர் தேவை என்பதால், 78 வயதான இவர் தெரிந்த்டுக்கப்பட்டுள்ளார். மிக அதிகமாக ஓர் 10 ஆண்டுகள் வரை பதவி வகிக்கும் சாத்தியக்கூறுகள் மட்டுமே (வயது காரணமாக) இருக்குமென்பதால், மாற்றங்களை பற்றி இவர் காலத்துக்கு பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற சமாதானம் பழமைவாதிகளுக்கும், மாற்றம் வேன்டுவோருக்கும் இடையே ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இவரது தேர்வுக்கு பிற்போக்கு கிருத்துவரான அமெரிக்க அதிபரின் ஆதரவும் இருந்ததாக தெரிகிறது. கிருத்துவ நாடுகளுக்கும், இஸ்லாமிய நாட்டு மக்களுக்கும் இடையே ஓர் சரியான புரிந்துணர்வு தேவைப்படும் இக்கால கட்டத்தில், ஒரு பழமைவாதி வாதிகனுக்கு தலைமை ஏற்பது எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனபது போகப்போக தெரியும். நன்றி - நந்தலாலா |